மொழிபெயர்ப்பு கவிதை பெஞ்சமின் செப்ஹனையா தமிழில் செந்தமிழன்

 

மொழிபெயர்ப்பு கவிதை

பெஞ்சமின் செப்ஹனையா

தமிழில் செந்தமிழன்

 

 

 

பெஞ்சமின் செப்ஹனையா (Benjamin Zephaniah) இங்கிலாந்தில் பிறந்து வாழும் ஜமைக்க எழுத்தாளர். 2008இல் டைம்ஸ் இதழ் வெளியிட்ட இங்கிலாந்தின் இரண்டாம் உலகப்போருக்கு பிறகான சிறந்த 50 எழுத்தாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.  விலங்குகள் நலனுக்காக போராடிவரும் பெஞ்சமின் 14 கவிதை தொகுப்புகளும், 5நாவல்களும், 5 குழந்தை நூல்களும் மேலும் சில நாடகங்களும் வெளியிட்டுள்ளார். கீழே மொழி பெயர்க்கப்பட்டுள்ள கவிதை இவரது ‘Wicked world’ என்ற இவரது கவிதை தொகுப்பில் வெளியானது. தன் நிலம் பிரிந்து அகதிகளாய் வாழும் அனைத்து மனிதர்களுக்கும் இப்பாடல் சமர்ப்பணம்.

நாங்கள் அகதிகள்

நான் இசையுணர்ந்த இடத்தினின்று வருகிறேன்

அங்கே நான் சுடப்பட்டேன் என் பாடலுக்காக

என் நிலத்தில் என் உடன்பிறந்தவன் சித்ரவதைபட்டான்

என் சகோதரனால்

நான் அழகடர்ந்த இடத்தினின்று வருகிறேன்

அங்கே நான் வெறுக்கப்பட்டேன் என் நிறத்திர்காக

அவர்களுக்கு பிடிப்பதில்லை நான் வணங்கும் முறை

அங்கே தடை செய்யப்பட்டன விடுதலை கவிதைகள்
நான் அழகடர்ந்த இடத்தினின்று வருகிறேன்

அங்கே பெண்கள் பள்ளி செல்ல அனுமதியில்லை

அங்கே உங்கள் நம்பிக்கைகள் கூட புகட்டப்படும்

அங்கே சிறுவர்களும் தாடி வளர்த்தாக வேண்டும்

நானோர் பழம்பெரும் கானகத்தினின்று வருகிறேன்

அது மாறியிருக்கிறது ஓர் விளைநிலமாக

அங்கே இன்றில்லை நானறிந்த மக்கள்

அகதிகளாய் இருப்போம் அனைவரும்

யாருக்கும் பாதுகாப்பில்லை

ஒரு முட்டாள் தலைவனோ மழையின்மையோ போதும்

உணவை கொண்டு வந்து சேர்க்க

அனைவரும் அகதிகளாய் இருப்போம்

அனைவரும் சொல்லப்படுவோம் சென்றுவர,

யாரோவால் வெறுக்கப்படுவோம்

யாரோவாக  இருப்பதால்

நான் அழகடர்ந்த இடத்தினின்று வருகிறேன்

அங்கே ஆறுகள் வெள்ளப்பெருக்காகும் ஒவ்வொரு வருடமும்

ஒவ்வொரு வருடமும் புயல் கூட சொல்லிவிடும்

நாங்கள் நகர்ந்து கொண்டேயிருக்க

நானோர் பழம்பெரும் இடத்தினின்று வருகிறேன்

அங்கு தான் பிறந்தது என் குடும்பம்

அங்கே நான் செல்ல விரும்புகிறேன்

ஆனால் நான் நிச்சயம் வாழ வேண்டுமே …
நான் வறண்ட பாலையினின்று வருகிறேன்

அங்கே பயணிகள் செல்வர் உடல் கறுக்க

வியாபாரிகள் விரும்புவர் துப்பாக்கிகள் விற்க

என்னால் சொல்ல இயலாது அதன் விலையை
சொல்லப்படுகிறேன் இன்று நான் நாடற்றவன் என

சொல்லப்படுகிறேன் நான்  ஒரு பொய்யென

சொல்லப்படுகிறேன் நவீன வரலாற்று புத்தகங்கள்

என் பெயரை மறந்திடுமென
அகதிகளாய் இருப்போம் அனைவரும்

சில நேரங்களில் ஓர் நாளோ,

சில நேரங்களில் ஒரு கைகுலுக்கலோ,

கையெழுத்திட்ட காகிதமோ மட்டுமே தேவைபடுகிறது.

நாம் அகதிகளிலாகவே வந்தோம்,

திடிரென ஒரு நாள் தோன்றிடவில்லை,

போராடாமல் இங்கு யாருமில்லை.

வானிலைக்கும் வன்முறைக்கும் ஏன்

பயந்து வாழ்ந்திட வேண்டும் ?

எல்லோரும் இங்கு வந்தது எங்கோ இருந்து தானே …

•••

Advertisements