அறிவிப்பு கணிணி புத்தகம் நெட்வொர்க் பற்றிய புத்தகம் மு.சிவலிங்கம்

அறிவிப்பு கணிணி

மு.சிவலிங்கம்.

 

 

அன்புடையீர், வணக்கம்.

நான் எழுதிப் பதிப்பித்துள்ள நெட்வொர்க் தொழில்நுட்பம் என்னும் நூல், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 11-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டில் வெளியிடப்பட்டது. எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்கள் வெளியிட, அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிவாளர் திரு.ஆர்.மீனாட்சிசுந்தரம் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

இந்நூல், கல்லூரி, பல்கலைக்கழகங்களில் கணிப்பொறியியல் பயிலும் மாணவர்களுக்கும், நெட்வொர்க் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும், நெட்வொர்க் புரோகிராமர்களுக்கும் பயன்படக்கூடிய நூலாகும். அவர்கள் மட்டுமின்றிக் கம்ப்யூட்டர் நெட்வொர்க் பற்றி அறிந்து கொள்ள விரும்பும் எவரும் எளிதில் படித்துப் புரிந்து கொள்ளுமாறு எளிய தமிழில் எழுதப்பட்டுள்ள அரிய நூல். 960
பக்கங்கள் கொண்ட நூலின் விலை ரூ.550/-

தங்களின் நண்பர்களுக்கு இந்த நூலைப்பற்றித் தெரியப்படுத்துங்கள். தங்களின் வலையகம், வலைப்பதிவகம், இணைய இதழ்களில் இந்த நூலைப்பற்றி எழுதுங்கள். கல்லூரி, பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள், பேராசிரியர்களுடன் அறிமுகமிருப்பின் அவர்களிடம் இந்த நூலை அறிமுகப்படுத்துங்கள். தங்களுக்குத் தெரிந்த பதிப்பகம், புத்தக விற்பனை நிலையம் இருப்பின் அவர்கள் இந்த நூலை
விற்பனை செய்ய முன்மொழியுங்கள். சிக்கலான, உயர் தொழில்நுட்பங்களைத் தமிழ்பேசும் சமுதாயத்தின் கைக்கு, எளிதில் எட்டும்படி செய்யும் அரிய பணியில் தோள் கொடுங்கள்.

தங்களின் தகவலுக்காக, நூல்பற்றிய ஒரு துண்டறிக்கை (Brochure), வெளியீட்டு விழாப் படம், என்னைப் பற்றிய
விவரக்குறிப்பு ஆகியவற்றை இணைத்துள்ளேன்.

மிக்க அன்புடன்,
மு.சிவலிங்கம்.

 
Advertisements