பதிப்பக அலமாரி அகல் பதிப்பகம் ஜாக் லண்டன்

பதிப்பக அலமாரி

அகல் பதிப்பகம்

ஜாக் லண்டன்

download (5)

 

 

 

 

 

 

 

 

ஏழு வயது ஜாக் லண்டன், மற்றெல்லாரையும் போலவே சாதாரணமாக இருக்கவே விரும்பினான். ஆனால், ஒவ்வொரு வரையும் போலவே, அவனறியாமலே அவனுள் வெளிப்படத் துடித்த பிரத்யேகத் திறமைகளையும் அவன் கொண்டிருந்தான்.

அவனைச் சுற்றியிருந்த நபர்கள் நடுவே, வாசிப்பு ஆர்வம் அவனை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தியது. லண்டனின் வீட்டில் வெகு சில புத்தகங்களே இருந்தன, அவனது கற்பனையைத் தூண்டிய முதல் புத்தகம் அவனது வகுப்பாசிரியர் இரவலாய்க் கொடுத்த வாஷிங்டன் இர்விங்ஸின் தி அல்ஹாம்ப்ரா (ஜிலீமீ கிறீலீணீனீதீக்ஷீணீ) ஆகும். இந்நூல் கிரானாடாவில் மூர்களால் கட்டப்பட்ட அழகிய அரண்மனை பற்றியதாகும், அது கடல் கடந்து காணப்படும் விநோதமான, அழகிய விஷயங்களைப் பற்றிய உலகுக்கான கதவைத் திறந்தது. அதனை அவன் மெய்மறந்து வாசித்தான். ஆனால் திருப்பிக் கொடுக்கும்போது, அதனை எத்தனை தூரம் அனுபவித்துப் படித்தான் என்பதைச் சொல்வதற்கு அவனது அளவுக்கதிகமான கூச்சம் இடந்தரவில்லை. எனவே ஆசிரியர், அவன் இதனைப் படித்து அலுத்துப்போயிருக்க வேண்டும், அதனால்தான் வேறெந்தப் புத்தகத்தையும் படிக்கக் கேட்கவில்லை என்று நினைத்துவிட்டார்.

தனது வீட்டில் கவலைகள், பரபரப்பு இவற்றிலிருந்து தொலைதூரம் இட்டுச் செல்லும் மாயக்கம்பளமாக ஜாக் புத்தகங்களைக் கண்டுகொண்டான். அண்டை நாடுகளில் வசிப்பவர்களைப்பற்றித் தெரிந்துகொள்ளவும் புத்தகங்கள் உதவிகரமாக இருந்தன. தி அல்ஹாம்ப்ரா, பதிமூன்று மற்றும் பதினான்காம் நூற்றாண்டு ஸ்பெயினைப்பற்றி அவன் தெரிந்துகொள்ள உதவியது. பால் டு சாய்லுவின் ஆப்பிரிக்கப் பயணம் (கியீக்ஷீவீநீணீஸீ ஜிக்ஷீணீஸ்மீறீs), இன்னும் முழுமையாக அறியப்படாததும் புதிர்கள் நிறைந்ததுமான ஆப்பிரிக்கக் கண்டத்தைப் பற்றிய அனுபவத்தை அவனுக்கு அளித்தது. ஒருநாள் வெப்பமண்டல நாடுகளின் புராதன வாழ்க்கையை தானே நேரில் பார்த்தறிவதற்காக, கடல்களில் பயணம் மேற்கொள்வதென அவன் உறுதி மேற்கொண்டான்.

ஆனால் அவனை மிகவும் கவர்ந்த புத்தகம், பிரபல பெண் நாவல் எழுத்தாளரான ஒய்டாவின் ‘சிக்னா’வே ஆகும். அந்தப் புத்தகத்தில் கடைசி நாற்பது பக்கங்கள் இல்லை. என்றாலும்கூட அது அவனுக்காகவே எழுதப்பட்ட புத்தகமென ஜாக்குக்குத் தோன்றியது. அந்நாவலின் நாயகன் ஜாக்கைப் போலவே, திருமண உறவு இல்லாமல் பிறந்தவன், இத்தாலிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் ஒரு கலைஞனாக முயற்சி செய்பவனுக்கும் மகனாகப் பிறந்த அவன், தனது இந்தக் குறையை, அவன் இசையை உலகமே விரும்பிக் கேட்கும் பெரும் இசையமைப்பாளனாக மாறி வெற்றிகாண்கிறான். அவனது இசையின் மகத்துவமானது, மக்கள் அவனது பிறப்பின் இழிவைப்பற்றி மறக்கும்படிச் செய்கிறது.

அவனது வாழ்வின் பிற்கட்டத்தில், தான் எழுத்தாளராக வருவதற்கு சிக்னா நாவலுக்கு முக்கியப்பங்குண்டு என்று அவன் கருதியிருக்கிறான். ஆனால் அந்தச் சமயத்தில் எலிஸாவிடம், “லிஸா, எனக்கு நாற்பது வயது ஆகிற வரைக்கும் நான் திருமணமே செய்துகொள்ளப்போவதில்லை. நான் ஒரு பெரிய வீடு ஒன்று கட்டப்போகிறேன். அதில் ஒரு அறை முழுக்கப் புத்தகங்களை அடுக்கி வைக்கப்போகிறேன்” என்று கூறியிருக்கிறாள்.

ஆனால் அது முழுக்க அவன் சொன்னதுபோல் நடக்கவில்லை. நாற்பது வயதானபோது, அவனுக்கு இருமுறை திருமணம் நடந்திருந்தது. அத்தோடு, அவன் ஒரு அறையில் அல்ல, பல அறைகளில் புத்தகங்களை நிரப்பி வைத்திருந்தான். அந்தப் புத்தகங் களில் நாற்பது புத்தகங்கள்வரை அவனால் எழுதப்பட்டவை. அவை விலை மதிப்புமிக்க பதிப்பு, மலிவுப் பதிப்பு, ஐக்கிய அமெரிக்க பதிப்பு, கனடா பதிப்பு, லண்டன் பதிப்பு, ஐரோப்பிய மொழிகள் மற்றும் கிழக்கத்திய மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டவை என பல்வேறு பதிப்புகள் அவனது அறையின் புத்தக அடுக்குகளில் நிறைந்திருந்தன.

ஆனால், நாற்பது வயதில்தான் உலகிலேயே மிகப் பரந்த அளவில் வாசிக்கப்பட்ட எழுத்தாளராகத் திகழ்வோமென்றோ, அவனது வாழ்வு கிட்டத்தட்ட முடிவை நெருங்கிவிட்டது என்றோ அவன் அறிந்திருக்கவில்லை. அவனது பிள்ளைப் பிராயத்தில் மிக விரைவில் மாறுதலைக் கொண்டுவந்த, அழிவுகளைக்கூட அவனால் காணமுடியவில்லை.

இவை அனைத்தும், ஃப்ளோராவின் பணம் பண்ணுவதற்கான அவசரத்திலிருந்து உருவாயின.

குத்தகை செலுத்தி மூன்று பண்ணைகளில் சில வருடங்கள் செலவிட்ட பிறகு, ஃப்ளோரா தன் கணவனை லைவ்மோர் பள்ளத் தாக்கில் உள்ள பண்ணையை ஒரு தொகையைச் செலுத்தி அடமானமாகப் பெற்று சொந்தமாக்கிக்கொள்ளும்படி வற்புறுத்தினாள். எலிஸாவுக்கு இப்போது பதினாறு வயது ஆகியிருந்தது. கடந்த வருடம், குடும்பத்தைக் கிட்டத்தட்ட அவளே சொந்தமாக கவனித்துப் பார்த்துக்கொண்டாள். ஃப்ளோராவுக்கு இதய சம்பந்தமான நோய் ஏற்பட்டதால், இதைச் சாக்காக வைத்து அவள் தான் செய்யவிரும்பாத வேலை அனைத்தையும் செய்வதி லிருந்து தப்பித்துக்கொண்டாள். பதினைந்து வயதில் எலிஸாவால் ஐந்துபேர் கொண்ட குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள முடியுமென்றால், இப்போது பதினாறு வயதில் அவளால் ஏன், சில வாடகை விருந்தினர்களையும் கவனித்துக்கொள்ள முடியாதென ஃப்ளோரா நினைத்தாள். எனவே, மூன்று குழந்தைகளைக் கொண்ட ஷெப்பர்டு என்ற மனைவியை இழந்த நபர் ஒருவர் வாடகை விருந்தினராக வந்தார். அவர்கள் தங்கவும், உண்ணவும் தரும் வாடகை, ஜான் லண்டன் தனது பண்ணையை மிக விரைவாக மேம்படுத்த உதவும்.

புதிய பண்ணையில் ஏராளமாக நிலம் இருந்தது. பழமரங்களும், ஆலிவ் கன்றுகளும், நட்டு வளர்த்தால் அதிக சிரமில்லாமலே சில வருடங்களில் சிறந்த பலனைத் தரும். ஜான் லண்டன், தனது குடும்பம் எவ்வளவு அதிகம் சமாளிக்க முடியுமோ அத்தனை அளவுக்கு, சந்தைக்கான காய்கறிகளை உழுது விதைத்தார். இருந்தும் அதன்பின்பும் ஏக்கர் கணக்கில் நிலங்கள் மிச்சமிருந்தன.

ஜான், அந்நிலத்தைப் பயிர் செய்யத் தயாராகும் வரை, அதனை மேய்ச்சல் நிலமாக வாடகைக்கு விடலாம். ஆனால், அந்நிலத்தை தாங்களே பயன்படுத்தினால் அதிலிருந்து கூடுதல் பணம் பெறலாமென ஃப்ளோரா உறுதியுடன் இருந்தாள்.

அவள், ஆக்லாந்திலுள்ள உணவக உரிமையாளர் ஒருவரைச் சென்று பார்த்து, ஜான் லண்டன் உற்பத்தி செய்து தரும் முட்டை கள், கோழிகளை வாங்கிக்கொள்வதற்கு சம்மதம் பெற்றுவந்தாள். ஜான் லண்டன் ஒருபொழுதும் கோழிகள் வளர்த்ததே இல்லை. ஆனால், கோழி வளர்ப்பது எத்தனை எளிதானது என ஃப்ளோரா விளக்கிச் சொன்னாள். அவற்றுக்கு உணவளித்தால் போதும். அது கோழியாக இருந்தால் முட்டைபோடும், சேவலாக இருந்தால் அதனை மாமிசமாகப் பயன்படுத்தலாம். அவ்வளவுதான்.

ஜான் லண்டன், தாம் பணத்தை எல்லாம் பண்ணைக்கே செலவிட்டு விட்டதாகவும், கோழிப் பண்ணை வைக்கத் தேவையான பணம் இல்லை என எடுத்துச்சொன்னார். ஃப்ளோரா, வங்கியில் பண்ணையின் பேரில் வட்டிக்குக் கடன் வாங்குவது எத்தனை எளிதென விளக்கினாள். ஃப்ளோரா, வியாபார மூளையுள்ளவளாகக் கருதப்பட்டதால், ஜான் அதற்குச் சம்மதித்தார். பண்ணையை வைத்து வாங்கிய பணத்தில் கோழிப் பண்ணைக்கான, வலை, கோழிக்கூண்டு, நீராவியால் சூடேற்றக் கூடிய முட்டை பொரிக்கும் சாதனம் உள்ளிட்ட அனைத்தும் வாங்கப்பட்டன.

கொஞ்ச நாட்கள் எல்லாம் நன்றாகப் போயின. ஃப்ளோரா எப்போதும் சொல்லிக்கொள்வதுபோல அவளது வியாபார அறிவு மதிநுட்பமுடையதுபோல தோற்றமளித்தது.

திடீரென கோழிகளை ஒருவித நோய் தாக்கியது. அதனால் கோழிகள் இறக்கவில்லை. எனினும் அவை முட்டையிடவில்லை. காய்கறிகளும், ஷெப்பர்டு குடும்பம் தரும் வாடகையும் மட்டுமே அவர்களது ஒரே வருவாய் என்று ஆகியது.

திரு.ஷெப்பர்டு எலிஸாவைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறியபோது இரண்டாவது வருவாய் திடீரென நின்றுபோனது. அது ஒரு அற்புதமான திருமணக் கோரிக்கை, ஷெப்பர்டின் மூத்த மகள் எலிஸாவைவிட மூன்று வயதே இளையவள். ஆனாலும், தனது சித்தி தனது தோளில் சுமத்தும் வேலைகளுக்கு முடிவே யில்லாததுபோல் எலிஸாவுக்குத் தோன்றியதால் அவள் இதற்குச் சம்மதித்தாள்.

தாய் போலவும் சகோதரி போலவும் அன்பைப் பொழிந்து வந்த எலிஸாவின் இழப்பு, ஜாக்கைப் பொறுத்தவரையில் பெரியதொரு அதிர்ச்சியாக அமைந்தது. அந்த இழப்பு அந்நிலத்தை நம்பி பிழைப்பை மேற்கொண்டுவந்த ஜான் லண்டனின் நம்பிக்கை அனைத்தையும் கலைத்துப் போடுவதாக அமைந்தது. அடமானம் வைத்த நிலத்துக்கான வட்டி தள்ளிப் போடப்பட்டபடியே வந்தது. அவனது பணம் அனைத்தும் ஆலிவ் கன்றுகள், திராட்சைக் கொடி கள், முட்டை பொரிக்கும் சாதனங்கள் எனறு செலவாகியிருந்தது. வட்டியைக்கட்ட அவரிடம் பணம் இல்லை. வங்கியோ அது கடன் கொடுத்த பணத்தை மீட்க ஜான் லண்டனின் நிலத்தையும் உடைமைகளையும் ஏலம் விடுவதாக முடிவுக்கு வந்துவிட்டது.

ஜான் லண்டனுக்கு ஐம்பத்து எட்டு வயதாகியிருந்தது- அவர் உழைத்துக் களைத்த மனிதராக இருந்தார். அவரது மனைவியின் பணம் பண்ணுவதற்கான முரட்டுத் திட்டங்கள், அவரது சக்தியை அவரிடமிருந்து பறித்துக்கொண்டிருந்தது. இன்னொரு முறை முதலிலிருந்து தொடங்க அவரிடம் தெம்பு இல்லை.

ஆனால் ஃப்ளோராவுக்கு இன்னும் வயதிருந்தது. அந்தப் பண்ணை ஒரு விருந்தினர் மாளிகையாக அமைவதில் தோற்றுப் போயிருந்தது. ஆனால் ஆக்லாந்துக்குத் திரும்பிச் செல்வது ஒரு மாறுதலான விஷயமாக இருக்கும். கலிபோர்னியா பஞ்சாலைகளில் வேலை பார்க்க, ஸ்காட்லாந்திலிருந்து பெண்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். அவர்களுக்கு வீடுகள் வாடகைக்கு விடுபவர் எவரொருவருக்கும் நல்ல வருவாய் கிடைக்கும். பஞ்சாலைக்கு அருகில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, பஞ்சாலைப் பெண்களுக்கான விடுதியாக அதை நடத்துமளவுக்கு ஏற்பாடு செய்தாள். ஃப்ளோராவும் இடாவும் அதனை நிர்வகித்தனர். ஜான் அதற்கான பொருட்களை வாங்கிவர, ஜாக் பள்ளி சென்று வந்தான்.

முதலில் அது பெரிய வெற்றியாகவே அமைந்தது. வாரந்தோறும் முறையாகப் பணம் வந்தது. வாடகை அறைகளுக்கு ஆள் கிடைப்பதில் சிரமமில்லை. அவர்களது கட்டடத்தை ஒட்டி காலி இடம் ஒன்று இருக்க, தனது முதல் இலாபத்தில் அதனை வாங்கி, கடன் வாங்கிய பணத்தில் இன்னுமொரு வீடு கட்டி, இன்னும் அதிக பஞ்சாலைப் பெண்களுக்கு வாடகைக்குவிட ஏற்பாடு செய்தாள் ஃப்ளோரா.

இப்போதெல்லாம் ஜான் லண்டன், தான் வியாபாரத்தைப் பார்த்துக்கொள்வதாக மனைவியிடம் கறாராகச் சொல்லி, லாபத்தைக் கையாளுதல், பற்றுகளைக் கொடுத்து தீர்ப்பது போன்ற வற்றை தன் வசம் வைத்திருப்பார் என நீங்கள் நினைக்கக்கூடும். ஆனால் அவரோ அவளது புத்திக்கூர்மையில் இன்னம் நம்பிக்கை வைத்திருந்தார். அவள் நிறையத் திட்டங்களை வைத்திருந்தாள், ஆனால் அதனில் எதுவொன்றையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்கும் திறமை அவளிடம் இல்லை என்பதை அவர் உணரவிலலை.

நம்பிக்கையான முறையில் பஞ்சாலைப் பெண்கள் தங்களது தங்கும் மற்றும் உணவுக் கட்டணங்களைச் செலுத்தி வந்தனர். ஆனால் ஃப்ளோராவோ வங்கியில் வாங்கிய கடனுக்கும் கட்டட உரிமையாளருக்கு வாடகைக்கும் செலுத்தவேண்டும் என்பதை மறந்து, தாராளமாக அதனைச் செலவழித்து வந்தாள். வியாபாரம் அபிவிருத்தி அடையும் முன்பே அந்தச் சிறுவியாபாரம் பட்டுப்போனதோடு, மீண்டும் ஒருமுறை லண்டன் குடும்பத்தினர் இடம்பெயர வேண்டியதாயிற்று.

ஜாக்குக்குப் பத்து வயதே ஆகியிருந்தது. அவனுக்கு மட்டும் இன்னும் அதிக வயது ஆகியிருந்தால், நிச்சயம் அவன் தனது தாயின் தவறுகளிலிருந்து பாடம் கற்றிருப்பான். வியாபாரம் குறித்த அவனது மனோபாவம், அவனது தாயுடையதைப் போன்றே பெரிதும் பாடம் தேவைப்படுவதாக இருந்தது.

அதுபோல, குடும்பத்தின் சிரமங்கள் குறித்து ஜாக் பெரிதும் சிந்தித்ததே இல்லை. ஆக்லாந்தில் பொதுநூலகம் எனும் ஒரு கட்டடம் இருப்பதையும், அங்கே, அவன் நாற்பது வயதில் அவன் சொந்தமாக வைத்திருக்க வேண்டும் என நினைத்த புத்தகங்களை விடவும் அதிகளவில் புத்தகங்கள் இருப்பதையும் கண்டுபிடித் திருந்தான். போதுமான காசில்லாதபோது தனக்கு மட்டும், மற்ற நேரங்களில் குடும்பத்துக்கும் சேர்த்து நுழைவுச்சீட்டு எடுத்துக் கொண்டு. திகட்டும் அளவுக்குப் புத்தகங்களைப் படித்தான். விரைவிலேயே நூலகரான செல்வி கூல்பெர்த், இந்தச் சுறுசுறுப்பான, நீலநிறக் கண்களையுடைய சிறுவன் வாசிப்பில் ஆர்வமிக்கவன் என்பதைக் கண்டுகொண்டாள். அவன் சாகசநூல்கள், பயணநூல்கள். கடற்பயண நூல்கள் மற்றும் கண்டுபிடிப்புகள் பற்றிய நூல்களில் ஆர்வம் கொண்டிருப்பதைக் கண்டுகொண்டு, அவனுக்குத் தேவையான புத்தகங்களைக் கொடுத்து உதவினாள். அந்நாள்வரை அவனுக்கு உண்மையிலேயே ஐந்து புத்தகங்களே வாசிக்கக் கிடைத்திருந்தன. தற்போதோ இவன் இருபுறங்களிலும் புத்தகக் குவியலுக்கு நடுவில் நடந்தபடி, தன்னைச் சுற்றியுள்ள உலகை மறந்து, புத்தகங்களின் பக்கங்களில் மட்டுமே வாழ்ந்து வந்தான். வாசிப்பதன் மூலம் புனித விது நடனம் போன்ற ஒருவகை உடல்நலக்குறைவு அவனுக்கு ஏற்பட்டது.

ஆனால் அவன் பகல் கனவு காண்பவனாக மாறவில்லை. நிலவுப் பள்ளத்தாக்கு நூலில், தன்னையே மாதிரியாகக் கொண்டு ஒரு பையனைப் படைத்துக் குறிப்பிடுகிறார். “ஆக்லாந்து, அதிலிருந்து வெளியேறிச் செல்வதற்கேற்ற நல்ல இடம்” ஆக்லாந்து, சான்பிரான்சிஸ்கோ கடற்கரைப் பிராந்தியத்தில் உள்ளது. சான்பிரான்சிஸ்கோவில் இருந்து கப்பல்கள், ஆர்க்டிக் வட்டாரப் பகுதிகளுக்கும், ஜப்பான் மற்றும் தென்கடல் பிராந்தியங்களுக்கும், ஃபார்மோசா சீனக் கடற்கரைப் பகுதிகளுக்கும், இங்கிருந்து கீழ்ப்புறமாக உலகின் தென்பகுதிப் பிராந்தியங்களுக்கும் அங்கிருந்து மேற்காக நன்னம்பிக்கைமுனை வழியாக, கிழக்காக கேப் கார்ன் வழியாக அட்லாண்டிக் கடல்பகுதிகளுக்கும் சென்று வந்தன. சான்பிரான்சிஸ்கோ துறைமுகத்தின் நுழைவாயிலான தங்கக் கதவின் (நிஷீறீபீமீஸீ நிணீtமீ) வாயிலாகச் சென்ற கடல் மார்க்கங்கள் பொதுநூலகத்தின் அலமாரியிலுள்ள எந்த ஒரு நூலில் காணப்படுவதை விடவும் விநோதமான, சாகசங்களும் வீரமும் செறிந்த மகத்தான உலகுக்கு இட்டுச்சென்றன. அவரது இலட்சியம் கடலில் பயணம் செய்வதாக இருந்தது. ஆனால் பத்து வயதில், அதனை நூல்களின் வழியே மட்டுமே சாத்தியமாக்க முடிந்தது.

லண்டன் குடும்பத்தினர் அவர்களது தங்குமிடமாகப் பயன்படுத்திவந்த வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டபோது, அவனது வளர்ப்பு அம்மா ஜென்னி தங்கியிருந்த வீட்டுக்கு அருகேயுள்ள ஏழ்மையான குடியிருப்புகளில் தங்கவேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகினர்.

ஜான் லண்டன் குடும்பத்துக்கு உதவும் வகையில் பெரிய அளவு சம்பாதிக்க முடியாத நிலையில் இருந்தார். எனவே ஜாக் பதினோரு வயதாகும் முன்பே வேலைக்குச் செல்ல வேண்டியதாயிற்று. அவனது அம்மா, உதயவேளைக்கு முன்பே அவனை எழுப்பிவிடுவாள். அவசர அவசரமாக, போதுமானதாயில்லாத பகலுணவை முடித்துக்கொண்டு, செய்தித்தாள் அலுவலகங்களுக்குச் சென்று செய்தித்தாள்களைப் பெற்றுக்கொள்வான். ஒவ்வொருவரும் தான் முதலாய்ப் பெற்றுக்கொண்டு கிளம்ப நினைக்கும் அந்த இடத்தில், தன்னைவிட பெரிய, வலுவான நபர்களிடையே தாக்குப்பிடிக்க அவன் கற்றுக்கொண்டான். செய்தித்தாள்களை விநியோகித்தபின் அவன் பள்ளிக்குச் சென்றான்.

பள்ளி முடிந்ததும், அவன் திரும்பவும் செய்தித்தாள் அலுவலகங் களுக்குச் சென்று, மாலை செய்தித்தாள்களைப் பெற்றுக்கொண்டு அதை விநியோகிப்பான். அதன்பின் பௌலிங் விளையாட்டு எனும் ஒருவகை விளையாட்டுக்காக அதற்கான கட்டைகளை அடுக்கிவைக்கும் வேலையைச் செய்வதற்குச் செல்வான். சனியன்று, பள்ளிக்கூடம் இல்லையென்பதால் அவன் ஐஸ்பாளங்களை விநியோகிக்க உதவுவான். ஞாயிறு முழுவதும் அவன் பௌலிங் விளையாட்டு அரங்கில் செலவிடுவான்.

அவனது சம்பாத்தியத்தின் மதிப்பு எவ்வளவென கணிப்பது சிரமம். செய்தித்தாள் விநியோகிப்பதற்கு அவனுக்கு மாதம் 12 டாலர்கள் தரப்பட்டது. அன்றைக்கு வாழ்க்கைச் செலவு மிகக் குறைவு. இன்றைக்கு 12 டாலரில் வாங்குவதைப்போல அன்றைக்கு ஐந்து மடங்குப் பொருட்களை வாங்கிவிடலாம். அத்தோடு, ஜான் லண்டன் பெரும்பாலும் வேலையின்றியே இருந்தார். வேலையில்லாதவர்களுக்கான உதவித்தொகையும் அங்கே கிடைக்கவில்லை. ஃப்ளோராவின் பணம் பண்ணும் திட்டங்கள் வழக்கமாக நட்டத்தில்தான் போய் முடியும். எனவே வாழ்க்கை மிகச் சிரமமாகவே இருந்திருக்கவேண்டும். எலிஸாவைப் போலவே, இடாவுக்கும் வாழ்க்கை மிகவும் சகிக்க முடியாததாகத் தோன்றியதால், மிகச் சிறுவயதிலே திருமணம் செய்துகொண்டாள். அவளது கணவனான ஃப்ராங்க் மில்லர் மூலம் அவளுக்கொரு மகன் பிறந்தான். தனது சொந்த மகனிடம்கூட காட்டாத அன்பை அவன்மீது ஃப்ளோரா அளவின்றிப் பொழிந்தாள்.

ஜாக் லண்டன் தனது பிள்ளைப்பிராயத்தைத் தனிமையில் கழித்தபிறகு, உயிர்த்துடிப்பு மிக்க உலகின் நடுவில் தான் இருக்கக்கண்டான். அவனது பள்ளித் தோழர்களைத் தவிரவும், செய்தித்தாள் போடும் குழுவினர் நடுவேயும் அவன் தன் புஜவலிமையைக் காட்டிக் கொண்டிருந்தான். ஜான் லண்டனுக்குக் காவலர் வேலை கிடைத்த சமயத்தில், தன் காலில் நிற்கக் கற்றுக் கொண்ட ஜாக், ஒற்றையாக ஒன்றுக்கு மேற்பட்ட பையன்களோடு சண்டையிட்ட ஜாக்கை தடுத்து நிறுத்த ஜான் அழைக்கப் பட்டதாக ஒரு கதை உண்டு. ஜாக், ஒருவர் பின் ஒருவராக சண்டையிட, “என் பையன் நல்லா சண்டை போடுகிறானா?” என்று கேட்ட ஜான் லண்டன், “அப்படி நன்றாக சண்டை போட்டால், என்னைக் கூப்பிடத் தேவையில்லையென நினைக்கிறேன்” என்றாராம். சண்டை போடுபவர்களில் ஒருவன் முறையின்றி நடந்துகொண்டபோது மட்டுமே அவர் தலையிட்டார்.

ஜாக் அவரது வேலைகளில், குறிப்பாக பௌலிங் அரங்கில் கட்டைகளை அடுக்குவது, மது விடுதிகளில் செய்தித்தாள் விற்பது போன்றவற்றில் வாழ்க்கை அதன் கீழான நிலையில் இருப்பதைக் கண்டார். கடற்கரையோரப் பகுதிகளில் மாலுமிகள் வாரக் கணக்கில், மாதக்கணக்கில் என கடலுக்குச் சென்றுவந்து கொண்டிருந்தனர்.

சண்டை சச்சரவுகள் அவனை வசீகரிப்பதையும் கவர்ந்து இழுப்பதையும் கண்டான். இந்தக் குடிச்சண்டைகள் அர்த்தமில் லாததாகவும் வெறுப்பூட்டுவதாகவும் இருந்தன. ஆனால் இதே நபர்கள்தான், ஜாக் பரவசத்துடனும் போற்றுதலுடனும் வாசித்த தொலைதூர நாடுகளுக்கு கடற்பயணம் சென்று வந்தவர்கள். அவன் பெரியவனாக இருந்தால், இத்தகைய விஷயங்கள் இல்லவே இல்லாதது போன்று பாவனை செய்யக்கூடாது. மாறாக அவற்றுடன் உடன்படவேண்டும் என நம்பினான். அதே உள்ளு ணர்வுதான், ஒரு விஷயம் அபாயகரமானதாக இருந்தாலும் துணிச்சலுடன் அதனை எதிர்கொள்ளத் தயங்காதவனாக அவனை மாற்றியது. ஒரு கோழையாக இருப்பதற்கே அவன் பயந்தான்.

அங்கே இருந்தபோது, அவனது குணாதிசயத்துக்கு இரு பக்கங்கள் இருந்தன. அவன் மற்ற நபர்களைப்போல இருக்க விரும்பினான், எனினும் தான் வித்தியாசமானவன் என்பதில் உறுதி யாக இருந்தான். அவர்களுடன் இணக்கம்கொள்ள அவன் ஒரு வழியைக் கண்டான். மற்றவர்களைவிடச் சிறந்தவனாகத் திகழ்வதன்மூலம் அவன் வித்தியாசமானவனாகத் திகழமுடியும். சிறந்த செய்தித்தாள் விநியோகஸ்தன், பௌலிங் அரங்கில் சிறப்பாகக் கட்டைகளை அடுக்குபவன், சிறந்த குத்துச்சண்டை வீரன் என எதிலும் சிறப்பாக இருக்க விரும்பினான். “நீங்கள் செய்யும் எதுவொன்றையும், நான் சிறப்பாகச் செய்வேன்” என்பதுதான் அவனது லட்சியப் பாடலாக இருந்திருக்கும்.

அவன் சம்பாதித்த அனைத்தையும் தாயிடம் கொடுத்ததன் மூலம் அவன் மற்ற செய்தித்தாள் போடும் பையன்களிடம் இருந்து மாறு பட்டுக் காணப்பட்டான். அந்தப் பையன்கள் அந்தப் பணத்தை தங்களது கைச்செலவுக்காகப் பயன்படுத்தி வந்தனர். ஜாக் தன் கைச்செலவுக்கான பணத்தை, பள்ளிச் சிறுவர்களுக்கிடையே வணிகம் செய்து மட்டுமே சம்பாதித்தான்.

அந்நாட்களில் சிகரெட்டுடன் அட்டைகளும் கொடுக்கப்படும் அதில் குத்துச்சண்டை வீரர்கள், புகைவண்டி எந்திரங்கள், இசை நாடகப் பாடகர்கள், அனைத்து நாடுகளையும் சேர்ந்த தேசியக் கொடிகள் இடம்பெற்றிருக்கும். அவற்றை ஜாக் தெருவோரச் சிறுவணிகர்கள், மதுவிடுதியின் சாம்பல் கிண்ணங்கள், பௌலிங் அரங்கின் வாடிக்கையாளர்களிடமிருந்து சேகரித்து வைத்துக் கொள்வான். அதிலிருந்து அவன் தன் சொந்தச் செலவுக்கான பணத்தைப் பெற்றான். இதன்மூலம் வரும் பணத்தை அவன் அம்மாவிடம் தரவேண்டியதில்லை.

சிகரெட் அட்டைகளைச் சேகரித்து விற்பதில் தொடங்கி, அவற்றை தபால்வில்லைகள், கற்கள், விநோதப் பொருட்கள், பறவை முட்டைகள் மற்றும் பளிங்குக் கற்களுக்கு பண்டமாற்று செய்துகொண்டான். எந்த ஒரு பையன் வைத்திருப்பதைவிடவும், ஜாக் செந்நிறப் பளிங்குக்கற்களின் அற்புதமான சேகரிப்பைக் கொண்டிருந்தான். அந்தக் கற்களிலே மிகுந்த மதிப்புடைய ஒன்று, குறைந்தபட்சம் 3 டாலர்கள் மதிப்புடைய பளிங்குக்கல்லை, ஒரு பையனிடம் 22 செண்டுகள் கடனாகப் பெற்றதற்கான அடமானமாகக் கொடுத்திருந்தான். ஆனால் அதை மீட்பதற்கு முன்பே பள்ளியிலிருந்து இடைநிற்க வேண்டியதாயிற்று. அவன் எதனையும் எதுவொன்றுக்குப் பதிலாகவும் அடகு வைப்பான். அவனது பணமதிப்பீடு குறித்த அறிவு மிகக்கூர்மையாக இருந்தது. அவனுக்குச் செலவு செய்ய எனப் பணம் இல்லாததும் இதற்கு ஓர் காரணம். அவன் மட்டும் வியாபாரியாக வர நினைத்திருந்தால், எவரொருவரையும்விட சிறந்த வியாபாரியாக வந்திருப்பான். பணத்தைச் செலவிடுவதில் அவன் பெரிய ஆளாய் வர முடியாது என்பதால், அதைச் சேர்த்து வைப்பதில் திறமையைக் காட்டினான். அவன் பேரம் பேசுவதில் திறமையானவனாக இருந்தான். மற்ற பையன்கள் பாட்டில்கள், கந்தைகள், பழைய இரும்புகள் மற்றும் சாக்குகளை விற்கவேண்டி வரும்போது பழைய பொருள் வாங்குபவரிடம் ஜாக்கைப் பேரம் பேசச் சொல்லி, அதில் அவணுக்கு ஒரு தொகையை ஊதியமாக அளித்தனர்.

ஜாக் கஞ்சன் அல்ல. ஜான் லண்டன், எப்போதாவது உபரிப் பணம் இருக்கும் அபூர்வமான சமயத்தில் ஜாக்கைக் கூட்டிக் கொண்டு கடற்கரையோரங்களுக்குச் சென்று, படகோட்டிச் சென்று மீன்பிடித்து வருவார். வாழ்க்கையில் சிரமப்பட்டு வயோதிகமடைந்த அவரும், இளமையிலிருக்கும் ஜாக்கும் ஃப்ளோராவிடமிருந்தும் அவளது வெறித்தனமான கோபம், ஆத்திரத்திலிருந்தும் விடுபட்டுச் செல்லும் இந்த சுற்றுலாக்களை பரஸ்பரம் விரும்பி அனுபவித்தனர்.

அவனுக்கு பதின்மூன்று வயதிருக்கும்போது, அவனது தனிப்பட்ட வியாபாரத்தின்மூலம் அவன் இரண்டு டாலர்கள் சேர்த்திருந்தான். அதனைக் கொண்டு, நடுவில் பலகைகள் இல்லாத, சல்லடையைப் போன்று ஒழுகக்கூடிய ஒரு படகை வாங்கினான். அதனைக்கொண்டு நதியின் முகத்துவாரத்தில் அங்குமிங்கும் செலுத்தியதோடு, விரிகுடாவில் சிறுபயணம் செல்லுமளவுக்கு அதனைச் செலுத்திப் பழகிக்கொண்டான். படகைச் செலுத்திய படியே அதில் சேரும் நீரை வெளியேற்றவும் பழகிக்கொண்டான். இந்த ஆரம்பகட்டப் பயிற்சிதான், ஜாக் லண்டனை, அவரது தலைமுறையின் சிறு படகுகளைச் செலுத்துபவர்களில் மிகுந்த திறமையும் துணிச்சலும் உடையவர்களில் ஒருவராக மாற்றியது.

ஜாக் பள்ளியில் விரைந்து கற்றுக்கொள்பவனாகத் திகழ்ந்தான், தனக்கு உதவும் எதுவொன்றையும் ஆர்வமுடன் கற்றுக் கொள்பவனாக இருந்தான். ஆனால் இந்தக் குணம்கூட, பாட்டு ஆசிரியையின் வெறுப்புக்கு ஜாக் ஆளாவதிலிருந்து காப்பாற்ற வில்லை. தினமும் கால்மணி நேரம் நடக்கும் பாட்டுப் பயிற்சியின் போது, ஜாக் வாயைத் திறப்பதில்லை என்பதை ஆசிரியை கவனித்தார்.

ஏன் என அவர் கேட்டபோது, அவள் பாடும்போது உயிர்ப்பே இல்லையெனவும், எனவே அவன் தன் குரலைக் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை எனவும் கூறினான்.

அந்த ஆசிரியை மிகுந்த கோபம்கொண்டாள், ஏனெனில் அவன் கூறுவது உண்மையெனில் அது மிகுந்த அவமானம். அவள் நேராக பள்ளி முதல்வரிடம் சென்று கண்ணியக்குறைவாக நடந்து கொள்வதாக புகார் செய்தார்,

ஜாக் தனது கண்ணியக்குறைவு பற்றி விளக்கம்தர அழைக்கப் பட்டபோது, முதல்வர் வெளிப்படையாகவே பாட்டு ஆசிரியை குறித்த ஜாக்கின் மதிப்புடன் உடன்பட்டார் என்றே கருதவேண்டும். ஏனெனில் அவர் ஜாக்கை தினமும் நடக்கும் பாட்டு வகுப்பில் கலந்துகொள்வதிலிருந்து விதிவிலக்கு அளித்ததுடன், ஆங்கிலக் கட்டுரை ஒன்றை எழுத வேண்டும் என்ற குறிப்பைத் தந்தனுப்பினார். ஜாக், தினசரி கட்டுரை எழுத வேண்டிய பழக்கமானது, பின்னாளில் அவர் எங்கிருந்தபோதும், புயலடித்த போதும்வட தினசரி ஆயிரம் வார்த்தைகளை எழுதுவதற்கான ஒழுங்கை அவரில் கொண்டுவந்தது என்று கூறுகிறார்.

ஜாக் அந்தப் பள்ளிக்கூடத்திலிருந்து நட்சத்திர மாணவனாக வெளியே வந்தார். அந்தப் பள்ளிக்கூடத்திலிருந்து வெளியேறிய அனைத்து மாணவர்கள் சார்பாக, தேர்ச்சி உரையை வழங்க ஜாக் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் மேடையில் நின்று பேசுவதற் கேற்ற உடைகள் இல்லை எனச் சொல்லி அந்த வாய்ப்பை மறுத்து விட்டார்.

ஆனால் அதைத் தவிரவும், ஆழமான காரணங்கள் இருந்தன. மற்ற பையன்களும் பெண்களும் அதைத் தொடர்ந்து உயர்நிலைக் கல்விக்கும் இன்னும் வசதியிருப்பவர்கள் பல்கலைக்கழகத்திற்கும் போக இருந்தனர். அவர் புத்திசாலி மாணவராய் இருந்தபோதும் உயர்நிலைக் கல்வியோ, பல்கலைக்கழகப் படிப்போ கிடையாது என்பதைச் சொல்லும் வலிமை தனக்கில்லை என அவர் நினைத்தார். ஜான் லண்டன், இனியும் குடும்பத்துக்கு உழைக்கும் நிலையில் இல்லை. எனவே, தன்னால் என்ன வேலையெல்லாம் பார்க்க முடியுமோ அதையெல்லாம் செய்து பணம் சம்பாதிப்பது தன் வேலை என நினைத்தார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

.

Advertisements