கவிதை அறிமுகப் படைப்பாளிசெந்தமிழன் கவிதைகள்

கவிதை
செந்தமிழன் கவிதைகள்

 

 

images (6)

உண்டியல்

ஒவ்வொரு உண்டியலும்
சேமித்து வைத்துள்ளது
ஓரிரு சில்லறைகளையும்
ஓராயிரம் ஆசைகளையும்

ஒப்பாரி

பலர் பெற்ற நிழல்
ஊஞ்சலாடிய சிறுமி
கிளை நிரப்பிய பறவைகள்
பழம் தின்ற பயணிகள்
உடல் சொரிந்த எறும்புகள்
என விடாமல் புலம்புகிறது
ஒரு வெட்டப்பட்ட மரம்

பசி

உணவருந்த மறுக்கும் குழந்தைக்கு
எதைஎதையோ காட்டிச் சோரூட்டினாள்
பசிக்கு அழுகும் இன்னொரு குழந்தையை கூட

காவலாளி

இரவெல்லாம் விழித்திருந்து
ஒய்யாரமாய் தூங்கும்
நாயின் மேல் பொறாமை கொண்ட
வீட்டை காத்த கிழவன் பெறுகிறான்
அதை ஒதுக்குப்புறமாய் கூட்டி
செல்லும் வேலையை

காதல்

நாம் சேர்ந்து விளையாடிய
ஊஞ்சல் கயிற்றில் தனியாக
தொங்கியிருக்க வேண்டாம்
நீ மட்டும்

**

Advertisements