பதிப்பக அலமமாரி ந. சிதம்பர சுப்ரமண்யன் இதயநாதம் நாவலிருந்து முன்னுரை

ந. சிதம்பர சுப்ரமண்யன்

 

இதயநாதம் நாவலிருந்து முன்னுரை

ந.சிதம்பர சுப்ரமண்யன் 100 ஆண்டு நினைவாக சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகத்திலிருந்து

 

 

idhya natham

 
ஒரு வார்த்தை

 

சங்கீதம் எங்கள் குடும்பத்தின் பரம்பரைச் சொத்து. ஆனால், என்னுடைய முன்னோர்களுக்குச் சரியான வாரிசாக நான் ஏற்படவில்லை. என் குடும்பத்தில் எனக்கு முன்னே பிறந்திருந்த சங்கீத சிம்மங்களுக்குப் பின்னால் வருவதற்கு நான் கொஞ்சமேனும் யோக்யதை இல்லாதவன். இருந்தாலும் இரத்தத்தில் ஊறியிருக்கும் பரம்பரைச் சங்கீத வாஸனை, நான் லௌகிக முறைப் படி எந்தத் தொழில் செய்து கொண்டிருந்தாலும், இதயத்தை சங்கீதத்திலேயே நாட வைத்தது. நாதத்தை முறைப்படி உபாசிக்காத நான் நாதயோகிகளை உபா சிக்கலாயினேன். அந்த முயற்சியின் பயன்தான் இந்தப் புத்தகம்.
ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள், தீக்ஷிதர், சியாமா சாஸ்திரிகள் போன்ற நாதப் பிரம்மங்களைப் பற்றியும், மஹாவைத்தியநாத சிவன் போன்ற சங்கீத உபாஸகர் களைப் பற்றியும் கேட்டு, என் இதயம் ஒரு நாதோபாச கனைப் பற்றி எழுதத் தூண்டியது. அநேக சங்கீதப் பெரியார்களைப் பார்த்தும் கேட்டும், அவர்கள் பட்ட சிரமங்களையும், அவர்கள் செய்திருக்கும் தபசையும் அறிந்ததிலிருந்து, ஒரு நாதயோகியைக் கதாநாயகனாக வைத்து எழுதவேண்டும் என்ற ஆசை வெகு நாட்களாக இருந்துவந்தது. அதன் விளைவே இப்புத்தகம்.
வாழ்க்கையிலே சில சங்கீதப் பெரியார்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் சிலவற்றைப் போன்று தொகுத்துக்காட்ட முயன்றிருக்கிறேன். காளிதாஸன் சொல்லியிருப்பது போல், “நாதயோகம் எங்கே, நான் எங்கே.” இருந்தாலும் ஆசை வெட்கமறியாது என்ற முறையில் இதை எழுதியிருக்கிறேன்.
ந. சிதம்பர சுப்ரமண்யன்

Advertisements