கட்டுரை ஸபா விண்மீனில் பல்கீஸ் பெண்ணொருத்தி ஹெச்.ஜி.ரசூல்

 

ஸபா விண்மீனில் பல்கீஸ் பெண்ணொருத்தி
ஹெச்.ஜி.ரசூல்
 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

என்னை பெயர் சொல்லி அழைக்கும் போது ஓடோடி வருவேன். காற்றின் இழைகளினூடே ஊடுருவிப் பாய்ந்து என் சப்தம் எப்படிரகசிய பயணம் செய்கிறது என்பதை கண்டுபிடிக்க இயலாமல் பல தடவை தவித்திருக்கிறேன். வான்வெளியில் பறந்துகொண்டிருந்தபோது அன்றொருநாள் என் தாயைப் பற்றி யோசித்தேன். ஞாபகங்களுக்கு உட்படாத அந்த சிறுவயதில் தாயின் மடியும்பயமானது. என் அலகுகளின் வழி குஞ்சுகளுக்கு பலநூறுதடவை இரையூட்டிய பாசத்தின் நிழல் விரிப்பும் திரும்பத் திரும்ப என்னைதொல்லைப்படுத்தின. என் இனத்தை விட்டொழிந்து ஏவல் அடிமையாய் தொழில் புரிகிற என்மீதே எனக்கு வெறுப்புப் படர்கிறது.

என் உடன் பிறவா சகோதரியின் மரணம் வெகுவாக என்னை பாதித்தது. மதிற்சுவரில், துணி காயப்போட்டிருக்கும் அசையில்மாமரக் கொப்பில், கிணற்று வலையில் எங்கெல்லாம் இளைப்பாற முடியுமோ அங்கெல்லாம் உட்கார்ந்து பழகியவள் மின்சாரக்கம்பியில் தெரியாமல் உட்காந்தபோது தான் அந்த சம்பவம் நிகழ்ந்தது. மரணித்திருந்த அவளை எப்படி அடக்கம் செய்வது ஒன்றுமேபுரியவில்லை. அந்தரத்தில் தொங்கிய அந்த உடலை தொட்டுத் தூக்கி குளிப்பாட்ட எத்தனித்தபோதுதான் நடைமுறைச் சிரமம்தெரிந்தது. காற்றில் குழியெடுத்து உடலை அடக்கச் சொன்னக் குரலைக் கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். தனிமையின் பாரம்மேலொங்க தல்கீது சொல்லி சடங்குகளை நிறைவு செய்தேன். ஹஜ்ஜின் போது கட்டப்படும் இரு வெள்ளைத் துண்டுகளாலானஇஹ்ராம் போல் மய்யித்தை குளிப்பாட்ட கபின் பொதிய மோதியார் யாருமில்லை.

அடர்ந்த வனாந்திரக்காடுகளில், அலைமோதும் கடற்புறாக்கள் மேகங்களை தொட்டுரச முயலும். மலைமுகடுகளின்அடிவாரத்தில் எங்கெங்கும் எனது அன்றாட தரிசனம். தனிமையும், கூடையும் சந்தோசமும் கலந்ததொரு வாழ்வுலகம் என்னில்மிச்சமிருந்தது.

எக்காலத்தையும் உறவுகளையும் பூமியில் மட்டத்திற்கு மேலே முறைப்படுத்திக் கொண்டதால் எப்போதாவது தான் இந்தமண்ணோடு தொடர்பு ஏற்பட்டது.

என்னை நேசித்தவர்களுக்கு என்றுமே துரோகத்தை இழைத்ததில்லை. எங்கு பார்த்தாலும் இல்லை. பூமியில் ஆட்சிசெய்பவர்கள் எல்லாம் கலீபாக்கள், மன்னர்கள் துளிக்குக் கூட பெண் இல்லை. என் எஜமானனின் கட்டளையை மீறி, காத்திருப்பையும்தாண்டி தேடல் வேட்டை நிகழ்ந்தது. நட்சத்திர உலகினூடே பறந்துசென்று ஒரு அதிசயத்தை கண்டுபிடித்தேன். அதிகாரமும், ஆட்சியும்,அரியணையும் கொண்டதொரு உலகம்.

என் பறத்தலில் ஸபா விண்மீனில் பல்கீஸ் பெண்ணொருத்தி அரசியாக முடிசூட்டிக் கொண்டு ஆட்சி செய்து கொண்டிருந்ததை உலகின்செவிகளுக்கு அம்பலப்படுத்தினேன். அல்லாஹ்வின் தூதரென அறியப்பட்ட என் எஜமானன் சுலைமான நபி இதைக் கேட்டுஅதிர்ச்சியுற்று மயங்கினார்.
எனது பாஷையை என் எஜமான் சுலைமான் நபி எப்படி கற்று வைத்திருந்தாரென சொல்லத்தெரியவில்லை. மிகுந்த பயபக்திகொண்ட தொழுகை வணக்கங்களில் அன்றாடம் கவனம் செலுத்தும் அவர் என்னை ஒரு ஏவல் அடிமையாக ஊழியம் செய்யப்பணித்தார்.

பாலைவன மண்ணில் பாதங்கள் பிணைந்து நடமாடும் காட்டின் சுவடுகளில் கால்கள் தளரும். நீண்ட தூர பயணங்களில்காலம் கரைந்துபோகும். தொழுகை நேரம் வந்ததும் உடலைத் தூய்மைப்படுத்த ஒளு செய்யத் தண்ணீர் தேடுவார். எனது வேலைஎன்பதே உயரே உயரே பறந்து கொண்டே மூச்சாலும் மனத்தாலும் வெட்டவெளி பூமிக்கடியில் நீரிருக்கும் இடத்தை கண்டுபிடித்துஅவருக்குச் சொல்வதுதான் சுலைமான் நபி அந்த இடத்தை தனது கைகளால் தோண்டுவார். அப்போது அங்கு ஊற்றுத் தண்ணிர்குமிழியிடும். வறட்சியும், கோடையும், வெம்மையும் கருக்கி எடுத்தாலும் இது மட்டும் நிகழும்.

என் இனத்திற்கென்று தனித்திருக்கும் இயல்புகளை எல்லாம் ஒவ்வொருவரும், ஒவ்வொரு பெயர் சொல்லி, காரணம்சொல்லாமல் அழித்துப்போட்டனர். தெற்குத் திசைக்காற்றில் சிறகு அடித்து விரித்து கடந்து செல்வதும், பல நேரம் குமிழியிடும்காற்றைக் கிழித்து சிறகை அடிக்காமல் நீட்டி நீந்திச் செல்வதும் விதவிதமான வழக்கம்.

இருபுறமும் அசைந்து பறக்கும் உடம்பின் அசைவுகளைப் பார்த்து என் நிழல்கள் கூட அல்லாஹ்வை சிரம் பணிந்தும், துதிசெய்தும் வாழ்கின்றன என ஒரு ஆலீம்பயான் சொல்லிக் கொண்டிருந்தார்.

புன்னைமரக்காடுகளின் பொந்தினுள் கண்களை உருட்டியவாறு காகங்களை அதன் குஞ்சுகளைத் தின்னும் கூகையாகஉருவெடுத்தேன். ஒரு மனநோயாளியாகி விட்டதுபோல் குரூரமாக நரமாமிசம் உண்ணும் ஜ“வனாக குழந்தையைச் சாப்பிட்டு பார்க்கும்தாயைப் போல தோற்றமெடுத்ததற்கு உண்மையிலேயே வெட்கப்பட்டதுண்டு. சில நேரம் எனக்கு பகல் முழுவதும் கண் தெரியாது. மரக்கிளைகளில் கூட்டம் கூட்டமாய் தலைகீழாய் தொங்குவேன். இருளில் அரசாங்கத்தை கைப்பற்றிபோது கண்கள் எனக்குகால்களாக மாறிப்போனது.

மரங்கொத்தி கொத்தி அலகுகள் சிதைந்தபோதும் வெவ்வேறு ரூபங்களில், நிறங்களில் என் இருப்பும், பறப்பும் தொடர்கிறது. ஒன்றல்ல நான் பலப்பலவாக உருமாறுகிறேன். எப்போதா வந்து துளைக்கப்போகும் ஒரு துப்பாக்கிக் குண்டிற்காகவும் எனது உடல்பதட்டத்தோடு காத்துக்கிடக்கிறது.
***