மொழிபெயர்ப்பு கவிதை சுயசரிதை. டேன் பேகிஸ் / இஸ்ரேல் தமிழில் இந்திரன்

மொழிபெயர்ப்பு கவிதை

சுயசரிதை.

டேன் பேகிஸ் / இஸ்ரேல்

தமிழில்     இந்திரன்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நான் முதல் அடியிலேயே செத்துப் போனேன் .

களத்தின் பாறைகளில் புதைக்கப் பட்டேன்.

கழுகு கற்றுக் கொடுத்தது என் பெற்றோருக்கு

என் உடம்பை என்ன செய்வது என்று.

 

எனது குடும்பம் பிரபலமானதென்றால்

அதன் பெருமை என்னைச் சேராது.

என் சகோதரன் கொலையைக் கண்டு பிடித்தான்.

என் பெற்றோர் துயரத்தைக் கண்டு பிடித்தார்கள்.

நான் மௌனத்தைக் கண்டுபிடித்தேன்.

 

அதன் பிறகு எல்லோருக்கும் தெரிந்தவை நடந்தன.

எங்களது கண்டுபிடிப்புகள் சீர்செய்யப்பட்டன.

கட்டளைகள் பிறப்பிக்கப் பட்டன.

அவர்களுக்கே உரிய முறையில் கொலை செய்யப் பட்டவர்களும் அவர்களுக்கே உரிய முறையில் துக்கம் அனுஷ்டிக்கப் பட்டவர்களும்

இருந்தார்கள்.

 

வாசகனைக் கருதி அவர்களின் பெயர்களை நான் சொல்ல மாட்டேன்.

அது பற்றிய நுட்ப விவரணைகள் முதலில் பயமுறுத்தி

கடைசியில் அலுப்பைத் தரக்கூடியவை.

 

நீ ஒரு முறை, இருமுறை, ஏழு முறை கூட சாகலாம்.

ஆனால் நீ ஆயிரம் முறை சாக முடியாது.

என்னால் முடியும்.

எனது மண்ணடி திசுக்கள் எல்லா இடத்தையும் போய்ச் சேருகின்றன.

 

பூமியின் முகத்தில் கேய்ன் பல்கிப் பெருகத் தொடங்கியபோது

பூமியின் வயிற்றில் நான் பல்கிப் பெருகத் தொடங்கினேன்.

எனது பலம் அவனுடையதைக் காட்டிலும் அதிகமாக இருந்தது.

அவனது கதைகள் அவனை விட்டுப் பிரிந்து என்னிடம் சென்றன.

இதுவும் கூட பாதி பழிவாங்குதல்தான்.

Advertisements