கவிதைகள் ரவிஉதயன் கவிதைகள்

 

கவிதைகள்  

ரவிஉதயன்

கவிதைகள்
1 விதை விழுகிறஇடம்
விதை
விழுகிற இடத்தில்
பூமி நெகிழ்ந்து கொடுக்கிறது

காற்று
அவ்விதைக்கு
ஜீவனைஅளிக்கிறது

முகில் கூட்டம்
மழையை அனுப்புகிறது

கதிரவன்
வெதுவெதுப்பைத்தருகிறது

அந்த இடமே
பரிசுத்தமாகிறது

பிறகு
அங்கு ஒரு பிரசவம் நிகழ்கிறது
2 குறுவாளின் கதை
அதில் காய்களை
உரிக்கிறாய்
பழங்களை
துண்டுகளாக்குகிறாய்

பால்கட்டிகளை,
கேக்குகளை
நேர்த்தியாய் அதில்
பிளக்கிறாய்

அதன் பளபளப்பில்
முகங்கண்டு மகிழ்கிறாய்

கன்னத்தில் அழுத்தி
அதன் குளிர்ச்சியை உணர்கிறாய்

அது
உனக்கெப்போதும்
உரைத்ததேயில்லை
ஆதியில்
குருதி பருகிவளர்ந்த
குறுவாளென்ற கதையை

3 குழந்தைகள் வளர்கிறார்கள்

குழந்தைகள் வளர்கிறார்கள்
சிறு குத்துச்செடிபோல
தத்தளிக்கும் இலைகளோடு
திமிரும் மலர்களோடு
தாங்கக்முடியாக்கனிகளோடு
பெரும் புதிரான வேர்களோடு

***

Advertisements