கவிதைகள் செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள்

 

செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள்

 

 

 

 

 

 

 

விடுதலை

விட்டு விடுதலையாகி

வீழ்ந்து கிடந்த

சிட்டுக் குருவியின்

சிறகொன்றில்

தத்திக்கொண்டிருந்தது

ஒரு ஈ.

இப்படி ஒரு தொடக்கம்

எந்த ஒரு

நாளுக்கும்

கவிதைக்கும்

இல்லாமல் போகக்

கடவதாக.

 

O

வேர் ஆர் யூ?

 

எங்கெங்கிருந்தும்

இங்கே

இப்பொழுதிற்கு

அவ்வப்பொழுது

இழுத்து வரும்

இளைய மகனின்

நர்சரி கேள்வி

“வேர் ஆர் யூ?”

 

o