மொழிபெயர்ப்பு கவிதை நிச்சயம் நீ நினைவில் வைப்பாய் டாலியா ரேவிகோவிச் / இஸ்ரேல் தமிழில் . இந்திரன்

 

நிச்சயம் நீ நினைவில் வைப்பாய்

டாலியா ரேவிகோவிச் / இஸ்ரேல்

தமிழில் . இந்திரன்

 

 

 

 

 

 

 

 

 

அவர்கள் எல்லோரும் போன பிறகு

நான் கவிதைகளோடு தனிமையில் இருக்கிறேன்.

சில கவிதைகள் என்னுடையவை;சில மற்றவர்களுடையவை.

மற்றவர்கள் எழுதிய கவிதைகளை நான் தேந்தெடுக்கிறேன்.

நான் அமைதியாய் இருக்கிறேன்.

மெதுவாக எனது தொண்டையில்

இருக்கும் முடிச்சு மறைகிறது.

நான் மீதம் இருக்கிறேன்.

 

எல்லொரும் போய்விடவேண்டும் என்று சில நேரங்களில் நான் விரும்புகிறேன்.

கவிதைகள் எழுதுவது, ஒரு விதத்தில் நல்லதாக இருக்கலாம்.

நீ அறையில் அமர்ந்திருக்கிறாய். சுவர்கள் உயரமாய் வளர்கின்றன.

வண்ணங்கள் அடர்த்தியாகின்றன.

ஒரு நீல கைகுட்டை ஒரு ஆழமான கிணறாக மாறுகிறது.

 

எல்லோரும் போக வேண்டும் என்று நீ விரும்புகிறாய்.

உனக்கு என்ன நடந்தது என்று உனக்குத் தெரியவில்லை.

ஒரு வேளை நீ எதையோ நினைக்கிறாய்.

பிறகு எல்லாம் போய்விடுகின்றன,

நீ ஒரு தூய்மையான படிகமாகி விடுகிறாய்.

அதன் பிறகு , காதல்.

நார்சிசஸ் தன் மீது அதிக காதல் கொண்டிருக்கிறான்.

அவன் ஒரு நதியையும் காதலித்தான் என்பதை ஒரு முட்டாள் மட்டுமே

புரிந்து கொள்ளாமல் இருக்க முடியும்.

 

நீ தனிமையில் அமர்ந்திருக்கிறாய்.

உனது இதயம் வலிக்கிறது ஆனால் உடைந்து போவதில்லை.

வெளிறிப்போன காட்சிகள் ஒவ்வொன்றாக கழுவி விடப்படுகின்றன.

பிறகு அவை தாவி விடுகின்றன.

சூரியன் நள்ளிரவில் அஸ்தமனமாகிறது

இருண்ட மலர்களும் கூட என்பதை நினைவில் கொள்.

 

நீ மரணித்தோ அலலது உயிருடனோ

அல்லது யாரொவாகவோ இருக்க விரும்புகிறாய்.

நீ விரும்பும் ஒரு நாடு இருக்கிறதா? ஒரு வார்த்தை?

நிச்சயமாக உனக்கு நினைவிருக்கும்.

 

சூரியன் அது நினைக்கும் நேரத்துக்கு அஸ்தமனமாவதற்கு

ஒரு முட்டாள் மட்டுமே அனுமதிப்பான்.

அது மிக விரைவாக மேற்கு நோக்கித் தீவுகளில் மறைந்து விடுகிறது.

 

சூரியன் சந்திரன், பனி கோடை

உன்னிடம் வரும்

எல்லைகளற்ற புதையல்களாக.

***

 

Advertisements