இளம் படைப்பாளி கவிதைகள் வளத்தூர்தி.ராஜேஷ்

இளம் படைப்பாளி

கவிதைகள்

வளத்தூர்தி.ராஜேஷ் 

 

 

 

 

 

 

 

 

 

 

உருவாகியிராத திசையின் தென்றல் தீண்ட
உருவாகிறது என் மனதின் அசைவுகள்.
அதில் என் நொதிகள் சரிய
உன் அமைவை ரசிக்கிறாய் .

அண்டமெங்கும் ஒலிக்கின்ற
மன ஒலியை
என் எதிரொலியாக மாற்றுகிறாய் .

என் இல்லாமையின் இருப்பை மட்டுமே
கூறிக்கொண்டிருக்கிறேன்
சுயத்தின் புலம்பல்கள்
ஆதியின் மவுனத்தில் சரண் புகும் .

தன் உணர்தலின்
தொன்மையின் படிமங்கள்
பிரபஞ்ச நிழலில்
ஒளிர்கிறது கனவுகளாக .

**

Advertisements