சிறுகதை-பொன்இளவேனில் பகடை மலைமீது காத்தருக்கிறோம் இளஞ்சேரா

பகடை மலைமீது காத்தருக்கிறோம் இளஞ்சேரா

சிறுகதை-பொன்இளவேனில்

 

 

 

 

 

 

 

 

 

 

இன்று பவுர்ணமிக்கு பின்மூன்றாம் நாள் உன்னை எதிர்பார்த்திருக்கிறேன். .இந்த புவன நகரம் உனது பிரிவால் மிகவும் மகிழ்சியற்று போயிறுக்கிறது. படை பரிவாரங்கள் ஏதுமற்று தனித்த வேட்டையாடச் சென்ற உனது திரும்புதல் புவனநகரவாசிகள் அனைவரையும் மகிழ்சியில் ஆழ்த்தும் இருள்களுக்குள் நுழைந்திருக்கும் நிழல் எதிரிகளால் மக்கள் பீதியடைந்து நாடே  துன்புற்ற நிலையில் உனது வரவுக்காக் அல்லவா ஏங்கிக் கொண்டிருக்கிறோம்

 

இருள் நகரத்து துரோகிகளை வெட்டையாடிவிட்டு நிமிர்ந்த மார்போடு புவன நகரம் அடைவாய் என்பதை நாட்டு மக்கள் அனைவரும் அரிவ்வர் இருள்தேசத்து கொள்ளையர்கள் பல விதமான வேடங்களில் தம் வசீகர மொழிகளால் இன்ம் கவர்ந்து திரியம்  ஆவிகளாக பரவிஅழித்துவிட்டு கொண்டிருப்பதை த்தடுக்க வேட்டையாடச்சென்ற உனது போர்ப்பயணம் நிச்சயம் வெற்றியடைந்திருக்கும் என்றே நம்புகிறோம்

 

நீ கூறிவிட்டு சென்றதைப் போல இரண்டு வருடங்களும் 109 நாட்களுக்கு பின் பவுர்ணமி மூன்றாம் நாளான இன்று உனது வருகைக்காக மக்களோடு நானும் எதிர்பார்த்திருக்கிறேன் இளஞ்சேரா .என்னிடம் ஒப்படைத்துச்சென்ற பிரியமான ராஜாங்க உயிரான முயலோடு காத்திருக்கிறேன். இந்தநாளில் .

 

நமது முயல் மிகவும் நலமாக உள்ளது ..உனது வேண்டுகோளை மிகவும் சிறப்பாகவே நிறைவேற்றியிருக்கிறேன். உனது ராஜங்கத்தின் சிம்மாசனத்தில் அமர்த்தி இனி வெற்றிகதைகளை ஊட்டி வளர்ப்பாய். என்பதை நான்அறிவேன். ஆயினும் பல சோதனைகளுக்குள்ளான எளிய மக்களின் நிலைமைகளையும் அவர்களின் துன்பங்களையும் கதைகளாகவேஇன்றுவரை அதற்கு ஊட்டியிருக்கிறேன்.

 

நமது வாழ்வின் எல்லா சிறைகளும் இந்த கதைகளின் வழியே நொறிங்கிவிழும் என்பதில் தீர்க்கமாகத்தான் இருக்கிறேன் .உனது குதிரை குளம்பொலிஓசைகளை கேட்க ஆயிரமாயிரம் செவிகளோடு காத்திருக்கும் இந்த பகடைமலை மேடுகளில் குடிகொண்டிருக்கின்றனர். பகல்களும் இரவுகளும் பகடை மலையின் மேல் உறங்கிவிட்டு சென்றாலும். நிலவொளியின் வெளிச்சங்களில் நாங்கள் காத்திருக்கிறோம்.

 

ஆரம்பத்தில் அரண்மனைவாசல்களிலிருந்து இந்த குட்டை பகுதிக்கு வந்து சேர்ந்த்திலிருந்து மிகவும் சிரமத்திற்குள்ளான உனது முயல் காலப்போக்கில் தன்னை வழக்கப் படுத்திக்கொண்டது. அதன் இருப்பும் மிகுந்த சுற்றளவில் இருப்பதை ப்போல அமைத்திருக்கிறேன். பச்சை புல்வெளிகளோடும் மலர் செடிகளோடும் புதர்களோடும் மிகவும் மகிழ்சியாகவும் சுதந்திரமாகவும் இருப்பதாக என்னிடம் கூறியிருக்கிறது எனக்கு மிகுந்த சந்தோசத்தை அளித்திருக்கிறது.

 

அரக்கியர்களிடமிருந்து தப்பித்துஒரு நாளில் ஏதாவது ஒருசில நிமிடங்களாவது தினமும் அதற்க ஒருகதையையாவது சொல்லிவிட்டுத்தான் செல்கிறேன் என்பது உனக்கு தெரிந்திருக்குமா?

 

முயலும் என்னிடம் கதைக்காக காத்திருத்தலின் தருணம் அதன் மரணத்தைவிட கடைசி நிமித்திலும் கூட உயிர்த்தெழுந்து அமர்ந்துவிடுகிறது. ஒரு கதையையாவது அல்லது ஒரு கதையின் ஆரம்பத்தை யாவது அதன் செவிகளக்குள் செலுத்தாவிட்டால் அது இறந்துவிடக்கூடிய நிலையாகிப்போனதை நான் மட்டுமல்ல நம் முயலும் அறிந்துதான் இருக்கிறது.

 

யாரிடமும் கூறவியலாத எனது வருத்த்த்தை விதவிதமான் உருவம் எடுத்து வந்து வெவ்வேறு வகையான செல்ல மிருகங்களின் மொழிகளில் கதைகளாக ஓதிக்கொண்டிருக்கிறேன் எவரிடமும் கூறமுடியாத சாபத்தை அரக்கிகள் எனக்கு தண்டனையாக்கியிருக்கிறார்கள்.

 

கதைகளோடு பிரியும்போது அதன் கதாபாத்திரத்தில் வரும் ஏதாவது ஒரு விலங்குகள். பறைவைகள்..புழுக்களாக மாறி கதைகளை விவரித்தபடி இருக்கிறேன்

 

அரக்கிகள் என்னை தின்றுகொண்டிருக்கிறார்கள் அவைகளின் ஏழேழு சந்த்திகளுக்கும் என்னை உணவாக்கிக் கொள்வதற்கு தேவைபடுவதாகவும் ஆனந்த நடனங்களுக்கிடையே உதிர்த்த அரக்கிகளின் உரையாடல்களில் தெரிந்து கொண்டிருக்கிறேன். அரக்கிகள் வௌவால்களாக என்மீது தொங்கிக்கொண்டிருக்கிறார்கள் அவைகளின் சப்தங்களால் காதுகள் வலுவிழந்துவிட்டன எனது சதைகளில் அவைகளின் நகங்களால் முழுதும் சல்லடையாக துளைத்திருக்கின்றன ஒவ்வொரு பகலிலும் எனத சதைகளில் தைத்த பிடிப்புகளில்தான் தொங்கிக்கொண்டிருக்கின்றன .

 

எப்படி எப்பொழுது நான் இதை உனக்கு புரியவைக்கப் போகிறேன் என தெரியவில்லை இளஞசேரா.  அவைகளின் உடல்கள் மிகவும் அருவருப்பாக இருக்கின்றன வாசனைகள் என்னுள் விஷமாக இறங்கிக்கொண்டிருக்கின்றது என்பதை நீ அறிந்திருக்க வாய்பில்லை.

 

கதை சொல்ல வரநேரமாகிவிடும் தருணங்களில் முயல். உயிரின் கடைசி துளி விழுகும் நேரமாக இருந்தும் எத்தனையோ முறை கதைகளால் பிழைக்கச்செய்திருக்கிறேன் இன்னும் எத்தனை நாட்கள் இப்படி சாத்தியப்படும்…தெரியவில்லை

 

கடந்த இரண்டு வருடங்களில் எத்தனையோ கதைகளை சொல்லிவிட்டேன் உனது முயலுக்க அழகிகள் கதை பிடிப்பதில்லை மேலும் குதிரைகள் யானைகள். நரிகள் மணிதர்கள் என எத்தனையொ கதைகளை கூறியிருக்கிறேன் முயலும் இன்றுவரை அகமகிழ்து இருக்கிறது.

 

இப்பொழுதெல்லாம் மகிழ்ச்சியான கதைகளே வேணடுவதாக கூறுகிறது எப்படித்தான் என தெரியவில்லை நானும் அதனிடம் தொடர்ந்து சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன்  சொல்லப்போகும் கதைகளுக்கு முன்கூட்டியே தயாரிப்பதற்கான எந்த அவகாசமும் அமைந்த்தில்லை .எனக்கு என்னை விடவும் முயலின் மீது கொள்ளைபிரியம்  அதுவும் அப்படித்தான் அகியிருக்கும் என நம்புகிறேன்

 

கதைகளை அதனிடம் சொல்லும்போது எனது குருதிகளின் வாடைகளையோ காயங்களையோ வருத்தங்களையோ ஜாக்கிரதையாக அதனிடம் மறைத்துக்கொண்டுதான் இருக்கிறேன்  நாம் முன்சென்ற பசுமையான காலங்களில் மிகவும் உடைந்து போன சிற்சில ஏமாற்றங்களையும் அதன் கதைகளையும் சேர்த்து முயலிடம் கூறியிருக்கிறேன்  அது மிகவும் வருத்தமடைந்திருந்த போதிலும் கதைக்கான பாத்திரங்கள் நாம் தான் என காட்டிக்கொள்ளாத பொழுதில் சற்று ஆறுதலடைந்திருக்கிறது

 

உனது வேண்டுகோளின்படி க்டைசி நாளான இன்று கடைசி கதையாக ஒரு இளவரசனின் கதையை தயார் செய்திருக்கிறேன் இளஞ்சேரா …………

 

அந்த கூண்டில் தண்டனைக்குள்ளான இளவரசன் அதன் கதவருகே தான் நின்றுகொண்டிருந்தான் கூண்டின் கதவும் திறந்துதான் இருக்கிறது . இளவரசனின் அறைகளில் அவனது உணவுகளின் தானிய்ங்களை .காய்கறிகளை மாயமாய் போய் கொண்டிருப்பதை எண்ணி கோபமுற்றிருந்த இளவரசன் ஏமாற்றத்துடனும் கோபத்துடனும் காத்திருந்தான்.

 

அந்த திருடன் வேறுயாருமல்ல  தன் நிழலடியில் பதுங்கும் எலி தான் அந்த திருடன் என்று கண்டு கொண்டான் தன்னிடம் துரத்தும் வலிமையோ கொல்லும் வலிமையோ தமக்கில்லை  தான் என்ன செய்ய இயலும் என மிகவும் மன வேதனையுற்றான்

 

அந்த எலி ஓடி சுற்றி வந்து விளையாடியபடி அவன் முன்னின்று கேலி செய்து கொண்டு நிற்கிறது  இளவரசன் வேதனை சொற்களோடு இறந்து போன காதலியான “மந்திரக்கன்னி“ யின் ஆவியோடு புலம்பிக்கொண்டிருந்த்தை பொருட்படுத்தாது  உணவுத் தட்டிலிருந்த தக்காளி பழம் ஒன்றை பறித்து கொறித்துக்கொண்டு அவனை ஏறஇறங்க பார்கிறது .அவன் உன்னிடமே வந்தடைய விரும்புவதாக மந்திரக்கன்னியிடம் கூறிக்கொண்டேயிருந்தான்

 

இந்த கதையோடு முடியும் க்டைசி நாளான இன்று பவுர்ணமி மூன்றாம் நாள் இளஞசேரா..