ஆவணப்படம்: கொல்லும் பெண்கள் சுப்ரபாரதிமணியன்

ஆவணப்படம்:

 

கொல்லும்  பெண்கள்

 

சுப்ரபாரதிமணியன்

 

 

 

 

 

 

 

 

 

குழந்தைகளின்  அழுகுரல்கள், கர்ப்பம்  கலைந்த பெண்களின் கண்களில்  தென்படும் கண்ணீர்த்துளிகள்  ஆகியவற்றின் பிம்பங்கள்  திரும்பத்திரும்ப மனதை  அலைக்கழித்துக் கொண்டே  இருக்கிறது.

 

அயர்லாந்தில்  பிறந்து வளர்ந்த் டேவிட்  கின்செல்லா என்பவர் ருஸ்யப் பெண்களின் கருக்கலைப்புப் பற்றி எடுத்திருக்கும் படம் “ கில்லிங் கேர்ஸ் “  பல வகைகளில் அதிர்ச்சி தரத்தக்கது. கைவிடப்பட்டோர், கர்ப்பம், யாருக்கு அக்கறை, யார் தருவது நீதி, இறந்த பிணங்கள், தன்னை விற்றது யாருக்காக, வெறும் பாலுணர்வா, தப்பித்தலா என்று படத்தின் ஆரம்பத்தில் தென்படும் தலைப்புகளின் பின்னணியில் தென்படும் பிம்பங்களும் அதிர்ச்சி த்ருகின்றன.

 

இந்த ஆவண்ப்படத் தலைப்பு  ‘ கில்லிங் பீல்ட்ஸ்”  என்ற எண்பதுகளில் வந்த  ஒரு படத்தின் தலைப்பை ஞாபகப்படுத்துகிறது. அதில் இரண்டு  ஆங்கிலேய பத்திரிக்கையாளர்கள் கம்போடியாவில் நடைபெறும் போர் பற்றி எழுதச் செல்கிறார்கள். அந்நாட்டின் தேசிய ராணுவத்திற்கும்,   பொதுவுடமைக்கார்ர்களுக்கும் நடக்கும் உள் நாட்டு யுத்த்த்தினைப் பற்றி எழுதவே செல்கிறார்கள், அவர்கள் பிணைக்கைதிகளாகவும் ஆக்கப்படுகிறார்கள்.

 

கில்லிங் கேர்ஸ்  படம் செயிண்ட்பீட்டர்ஸ்பர்க்கின்  ஒரு சாதாரண கிளினிக்கில்  மூன்று இளம் பெண்கள் கருக்கலைப்பு செய்வதில்

 

துவங்குகிறது.  மருத்துவ நனையின் பின்புறவாசல் வழியே  ஒரு வார இறுதி  நாளில் வந்து வார விடுமுறையைக் கழித்து விட்டு அடுத்த நாள் அலுவலகத்திற்குச் செல்கிற  ஆயத்தத்துடன் இளம் பெண்கள் கருக்கலைப்பு செய்து கொண்டு சென்று விடுகிறார்கள். பெரும்பான்மையோர் சிதைந்து போன இரத்தத் துண்டுகள், சிதைந்த தங்கள் கருக்களை யாரும் பார்க்க விரும்புவதில்லை. ஏழு மாதக் கருவை ஒரு  இளம் பெண் கருக்கலைப்பு செய்யும் கதையும் இதிலிருக்கிறது.

 

குறைந்த சம்பளத்தில்  வேலை செய்வது, கர்ப்பத்திலிருந்து  தங்களைப் பாதுகாக்கும்  நடவடிக்கைகள் எடுக்காமலிருப்பது  போன்றவை இவர்களை இங்கு தள்ளி விடுகிறது. ருஸ்யாவில் காணப்படும் வேலையில்லாத் திண்டாட்டம் பெண்களையும் பாதிக்கிறது. 1946ல் ஸ்டாலின் ஆட்சி கால சட்டமொன்று கருக்கலைப்பைத் தடை செய்திருக்கிறது. ஆனால் அச்சட்டம் 1955ல் நீக்கப்பட்டு விட்டது. 54 நிமிட இப்படத்தில் இடம் பெறும் குழந்தைகளின் அழுகைக் காட்சிகளும் அதிர்ச்சி தரத் தக்கவை. குழந்தை பிரசவம் சாதாரணத் தரையில் நடப்பதும், கருக்கலைப்பும் வெறும் தரையில்  நடப்பதும் காட்டப்படும் காட்சிகளும் கூட்த்தான். மேற்கத்திய நாடுகளின் பாதிப்பில் சுதந்திரப் பெண்களின் நடவடிக்கையும், அழகான இளமைக் காலங்களை தனியே கழிக்கும் பெண்களின் துயரமும் பொருளாதாரச் சிக்கல்களால் அவர்கள் தடுமாறுவதும் தெரிகிறது.

 

80 சதம் ருஸ்யப்  பெண்கள் ஒரு தடவையாவது  அபார்சன் செய்து கொள்கிறார்கள்.  இரண்டு முதல் பத்து தடவை  வரை அபார்சன் செய்து  கொள்ளும்  பெண்கள் பற்றிய  குறிப்புகள் அதிர்ச்சி  தருகின்றன.

 

கருக்கலைப்பை  மீறி குழந்தைகளின் பிறப்பு  விகிதம் ருஸ்யாவில் வெகுவாகக்  குறைந்து  வருகிறது. அதிகப்படியான  எய்ட்ஸ் பிரச்சினையும்  காரணமாக இருக்கிறது.

 

அங்கு கருக்கலைப்பு செய்வது அரசு சார்ந்த மருத்துவமனைகளில் இலவசச் சிகிச்சையாகும். குடும்பக் கட்டுப்பாடு என்பது செலவு வைக்கும் சமாச்சாரமாக  இருக்கிறது. எனவே கருக்கலைப்பிற்கு சாதாரணமாக வந்து

 

விடுகிறார்கள். அதிகபட்ச் 15 மணி நேர சிகிச்சை  தங்களுக்கு ஏதுவானது என்று நினைக்கிறார்கள்

 

25 செண்டிமீட்டரில் 500 கிராம் எடை கொண்ட சதைத் துணுக்குகளை தங்கள் உடம்பிலிருந்து வெளியேற்றி விடுவதைச் சுலபமாக இளம்  பெண்கள் எடுத்துக் கொள்கிறார்கள். பாலியல் நடவடிக்கைகள் இல்லாத வாழ்க்கையை சுவாரஸ்யமாக எடுத்துக் கொள்வதில்லை. பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம் என்பது பற்றியும் சிலர் இப்பட்த்தில்  பேசுகிறார்கள். பெத்ராஸ்கா மாற்றம் தந்திருக்கும் முதல் தலைமுறைப் பெண்களின் கதி இது என்கிறார்கள்.

 

“ எல்லாவற்றுக்கும்  ரேசன். டாய்லட் பேப்பர்கள், உருளைக்கிழங்கு, கருத்தடைச்  சாதனங்கள்   வாங்கவும் ரேசந்தான். க்யூதான். இதை விட கருக்கலைப்பிற்கு காத்திருப்பது பெரிதாகப் படவில்லை “ என்கிறார் காத்திருக்கும் ஒரு பெண்மணி.

 

கருக்கலைப்பை  சட்டரீதியாக அனுமதிக்கும்  முறை இந்தியாவில்

 

1971 ல் நடைமுறைக்கு  வந்த்து. சென்றாண்டில் இருபத்தைந்து லட்சம் பேர் சட்டரீதியான அனுமதியுடன் கருக்கலைப்பு செய்திருக்கிறார்கள். 80 லட்சம் பேர் சட்டத்திற்குப் புறம்பான முறையில் செய்து கொண்டிருக்கிறார்கள்.. பெண் குழந்தைகளை  நிராகரிப்பது, திருமணம் அல்லாத உறவுகள், அதிகக் குழந்தை வளர்ப்பின் சிரமம் என்று பல காரணங்கள். மக்கள் தொகை கட்டுப்பாடு என்ற முறையில் இது இங்கு அனுமதிக்கப்படுகிறது.பெரும்பான்மையான நாடுகள் இதை அனுமதிக்கின்றன. அயர்லாந்து போன்ற நாடுகள்  பெண்ணின் உயிருக்கு ஆபத்து என்ற நிலையில்தான் இதை அனுமதிக்கின்றன.முஸ்லிம் நாடுகளில் மறைமுகமானதாகச் செய்யப்படுகிறது.

 

எங்கள் திருப்பூர்  நகரில்  கருக்கலைப்பு மாத்திரைகளை  அனுமதியின்றி விற்றதற்காக  சென்றாண்டு 10 மருத்துக்கடைகளின்  நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு  கடைகளின் அங்கீகாரங்கள்  ரத்து செய்யப்பட்டன.இடம்  பெயர்ந்து வந்து இங்கு  பனியன் தொழில் புரியும்  தொழிலாளர்களின் மத்தியிலான  பாலியல் தொடர்புகள் நிறைய  கருக்கலைப்பிற்கும், மாத்திரைகளின்  உபாயத்திற்கும் வழி வகுத்திருக்கின்றன.கருக்கலைப்பு  மாத்திரைகள் தடை செய்யப்பட்ட  பின் அதன் தொடர்ந்த மாதங்களில்  மனநல மருத்துவர்களிடம்  வந்து சிகிசை பெற்ற இளம் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

***

Advertisements