பதிப்பக அலமாரி தக்கை பதிப்பகம் மதுக்குவளை மலர் வே.பாபு கவிதைகள்

பதிப்பக அலமாரி தக்கை பதிப்பகம் வெளியிட்ட மதுக்குவளை மலர் என்ற கவிதை தொகுப்பு

வே.பாபு கவிதைகள்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இந்நேரம்

அம்மு இருந்திருந்தால்

என

யாராவது பேச்சைத் தொடங்கினால்

கோபம் தலைக்கேறிவிடுகிறது

தேவன்

என்னை

ஆதாமாக

அனுப்பிய கணத்தில்

அவளை

ஏவாளாக அனுப்பி வைத்தான்

நானூறு வருடங்களுக்கு

முன்னால்

நானொரு சிற்றரசனாகவும்

அவள்

என் பட்டத்து ராணியாகவும்

இருந்தாள்

காலச் சக்கரத்தை

சுழற்றினால்

சரியாக

நானூறு வருடங்கள் கழித்து

என்னைவிட்டு

பிரியாத

இணை இயந்திரமாகவும்

இருக்கிறாள்

இதோ

இந்த மதுவிடுதியின்

மரத்திலிருந்து

ஒரு சின்னஞ்சிறு பூ

என் மதுக்கோப்பையினுள்

வந்து விழுகிறது

2.

சற்று முன்

இறந்தவனின்

சட்டைப் பையில்

செல்போன்

ஒலித்துக் கொண்டேயிருக்கிறது

கையில் எடுத்த

காவலர்

”சார் யாரோ

அம்முன்னு கால் பண்றாங்க”

என்கிறார்

ஒரு நொடி

இறந்தவனின் கண்கள்

திறந்து

மூடுகின்றன.

கனவுகளிலும்வீழ்பவன்

பெயர் தெரியா மிருகமொன்று

போராடி

உயிர்த்தப்பி பிழைத்தோடியது

முந்தைய கனவில்

அதேபோலத்தான்

சிங்கங்களும்

தப்பியோடின

பிறிதொரு கனவில்

எல்லா திசைகளிலும்

அடித்துக்கிடத்தினேன்

பாய்ந்து வந்த புலியை

உடல் இறுக்கி

எலும்புகள் நொறுக்கி

நான் அப்படியே

விழுங்கப்படுவதெல்லாம்

அம்மு வந்துபோகும்

கனவுகளில் மட்டுந்தான்

இன்றும்

நீங்கள் கோழி வறுவலோடு மேன்ஷன்ஹவுஸ் பிராந்தியை குடித்துக்கொண்டிருந்தீர்கள்.

இந்த வீடு நரகம்போல் உள்ளது,

உன்னோடு தொலைபேசியில் பேசியது அவனுக்கு தெரிந்து விட்டது.

இரவு முழுக்க பெல்ட்டால் அடித்தான்,

இனி நிரூபிக்க ஒன்றுமில்லை.சீக்கிரம் இங்கிருந்து விடைபெற்றாக வேண்டும்

என

அவள் தொலைபேசியில் அழுத தினங்களின் இரவுகளில்

நீங்கள் கோழி வறுவலோடு மேன்ஷன்ஹவுஸ் பிராந்தியை குடித்துக்கொண்டிருந்தீர்கள்.

கணவனின் சந்தேகத்தால் இளம் மனைவி தற்கொலை எனும்

மூன்றாம் பக்கச் செய்தியோடு

இன்றைய இரவிலும்

கோழி வறுவலோடு

மேன்ஷன்ஹவுஸ் பிராந்தியை

குடித்துக்கொண்டிருக்கிறீர்கள்.

*

Advertisements