கவிதை ரமேஷ் வைத்யா கவிதை

கவிதைகள்

ரமேஷ் வைத்யா கவிதை

 

 

 

 

 

அரவங்கள் நழுவும் அநாதை வனத்தில்
உன் நினைவுகளைத் தொலைப்பேன்

சாத்தான் கோயிலின் ஸ்த‌ல‌ விருட்ச‌ த‌ள‌மெடுத்து
நெருப்பிட்டு சுவாசித்து ம‌திகுழ‌ம்பி உறைவேன்

என் உதிர‌த்தும் எனில்பாதி உத‌ர‌த்தும்
உதிர்ந்த‌ திர‌வியத்துக் குன்பெயரைச் சூட்டாம‌ல்
எப்போதும் வெறித்திருப்பேன்

அர‌விந்த ஹ்ருதயத்தில்
ஆலகால நெய்யூற்றி ஆகுதியாய்க் கொடுப்பேன் நான்

ஆள் கூட்டம் இடைநின்று
அரையாடை அசைய அதர்வண மந்திரத்தால்
அழிவினைகள் செய்திருப்பேன்

எந்த க்ஷணத்திலும் ஏதேனும் செய்து
உன்னை மறந்தபடியே
இருப்பேன் நான் அனவரதம்

*