கவிதைகள் ஆறுமுகம்முருகேசன் கவிதைகள் கவிதைகள்

 

ஆறுமுகம்முருகேசன் கவிதைகள்

 

 

 

 

 

 

 

 

 

 

அசாதாரணத்தருணங்கள் 

அழுக்குச் சட்டையோடும்
மழிக்கப்படாத தாடியோடும்
வந்து கொண்டிருந்தான் அவன்
என்கிருந்தப்பா வருகிறாயென்றேன்
கவிதைக்குள்ளிருந்து என்றான்
எங்கப்பா போகிறாயென்கிறேன்
கவிதைக்குள் என்கிறான்
ஒரு சாதாரணனை
ஒரு சாதாரணனென எப்படிச் சொல்வது?

*********

நம்பிக்கையின்வரைபடம் 

தனிமையின் இறகுகளை
ஒவ்வொன்றாய்
ஒவ்வொன்றாய்
பிய்த்துக்கொண்டிருந்தேன்

புறக்கணிப்பின்
அவமானத்தின்
துரோகத்தின்
நம்பிக்கையின்மையின்
சிறகுகள் நீள நீளமாய்
வளர்ந்துக்கொண்டேயிருந்தது அதன் போக்கில்

பரிச்சயமற்ற ஓர் உருவத்தை
ஒரு குழந்தையைப்போல
வரையத் துவங்கினேன்
ஒரு நிராதரவானச் சந்தர்ப்பத்தில்

நிலம் முட்டிய மழையாக
நிறைந்து வரும் காடு அணைய
என்றதொரு நம்பிக்கையில்

*********

தீராப்பிரியம் 

சுனையூறி சுனையாற
அவிழ்க்கிறேன் தனிமையை
கனவுக்குள் விழுந்த புரவியின் நிழல்
பிரிவுக்கு முந்தைய அவனது விரல்களாய்

*********

இருப்பதுஒருவாழ்வு

கடல் மேல் துள்ளும் கடலை
அலையெனச் சொல்லிச் செல்வதில்
எச்சலனுமும் இல்லையெனக்கு

நமது புணர்வை ஒத்துக் கேட்கும்
நீண்ட மூக்குடைய இரவினிடத்து

*********

ஆமென் 

பெய்நிழல் பேய்நிலம் உண்டேன்
ஜென்ம பந்தம் உனக்கு
தெய்வ திருப்தி எனக்கு

*********

ஆம் 

அதே ஆற்றில்
அதே நீந்துதலின் ஒரு தருணம்
பிடிபடும் மீன்

*********