கவிதைகள் – றியாஸ் குரானா கவிதைகள்

 

றியாஸ் குரானா கவிதைகள்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கவனயீனமாய் கொல்லப்படலாம்

 

 

இரவின் கடைசிப் படிக்கட்டில்

அமர்ந்திருக்கிறேன்

பகலின் எல்லைக்குள்

கால்கள் அசைந்து கொண்டிருக்கின்றன

பகலுக்குள் இறங்கி

வெகு நேரங்களுக்குப் பின்புதான்இ

இரவு உதிர்ந்த இலை

பகலின் ஓரத்தை தாண்டி

வந்து கொண்டிருக்கின்றது

பழுப்பும் பச்சையுமாக

அதன் நிறத்தை வெளிப்படுத்தியது

இன்னும் சில நாட்கள்

மரத்திலே இருக்க வேண்டிய

வயதுதான் அதற்கு

செடியில் இருந்த போது

இலையின் கீழ்இ

மறைவாக உறங்கிய எறும்பு

இன்னும் கனவிலே இருக்க வேண்டும்

காற்று ஒத்திவிட

தரையில் புரண்டு

குப்புறக் கிடந்தது இலை

அதன் முகட்டில்இ

கண் விழித்த எறும்பு

மலையொன்றில்

சிக்கிவிட்டதைப் போல

திகைத்து நின்றது

தப்பிக்கும் முயற்சியில்

மலையெங்கும் அலைந்தது

இலையின் அருகில்

எனது கால்கள்

நடந்து கொண்டிருக்கின்றன.

 

*

 

 

 

எல்லாமே சரியாக நடந்தன

அச்சுறுத்தும் தொனியில்…

நாய்களைக் குரைக்கச் செய்தேன்

வீட்டைச் சுற்றி

நடமாடவிட்டேன்

பலநூறு காலடிகளைக் கொண்டு

கலவரம் நிறைந்த சப்தங்களை

தொடர்ச்சியாக எழுப்பினேன்

தூக்கமற்ற காவலர்களை

ஆயுதங்களுடன் காவலுக்கு நிறுத்தினேன்

நகர்ந்து சென்று,

அவர்களுக்கருகில் நிற்கும்படி

மரங்களிடம் வேண்டிக் கொண்டேன்

முதலில் அலுமாரியைப் பூட்டினேன்

என்னால் கூட,

கண்டுபிடிக்க முடியாத இடத்தில்

அதன் சாவியை

மிகக் கவனமாக தொலைத்தேன்

வீட்டின் ஒவ்வொரு அறையாகப்

பூட்டி, அனைத்துக் கதவினருகிலும்

நான் ஒருத்தனே

காவலர்களாக நிறுத்தப்பட்டேன்

மிகக் கவனமாக

பாதுகாப்பாக

இப்படி எல்லாமே சரியாக நடந்தன

அவன் திருடிச் செல்லுவதற்கு ஏதுவாய்..

நான் என்ற

இன்னொருவன்தான் அந்தத் திருடன்.

*

கள்ளச் சாட்டு

பிரிந்துவிடுவதற்கு

முடிவெடுத்த பிறகு

முதன்முதலாக சந்திக்கிறோம்

கசப்பின் காரணங்களை

பக்கம் பக்கமாக வாசிக்கிறாள்

ஏமாற்றங்களை

உரத்துப் படிக்கிறாள்

தொல்லைகளின் அறிக்கையை

பல பக்கங்களில் எழுதிச் சமர்ப்பிக்கிறாள்

தொந்தரவுகளைப் பற்றி

ஒவ்வொன்றாக கதைசொல்கிறாள்

எல்லாவற்றையும் நான்

எதிர்க்கருத்துச் சொற்களில்

விளங்கிக் கொண்டிருக்கிறேன்

புத்தகம் மூடப்பட்டது

அவள் கண்களின் எல்லையைத்

தாண்டிச் சென்று கொண்டிருக்கிறாள்

அவசர அவசரமாக,

நினைவுகளை ஆய்வு செய்து

இருவர் பற்றிய தகவல்களையும்

பரஸ்பரம் அpக்கிறோம்

அழிக்க முடிந்தால்,

அன்பே என்று

புதிதாய் சந்திக்கலாம்

ஆனால்,

முன் எப்போதும் அறிந்திராதவர்களாக

நாங்கள் நடிப்பதாக

எங்கள் குழந்தை

குற்றம் சாட்டிக்கொண்டே

இருக்கும்.

பழைய தம்பதியினர்தான்

எனினும், புதிது புதிதாக

ஒவ்வொரு நாளும் சந்திக்க

கடமைப்பட்டிருக்கிறோம்.

*

மரணிக்காத ஆசிரியன்

பறவையைப் பற்றி

எழுதிய பிரதியில்

அது இல்லாமல் போனது கண்டு

நீங்கள் வியப்படைய வேண்டாம்

நமது தேவைக்காக

நமது அவசரத்திற்காக

வரும்படி

பறவையை கட்டாயப்படுத்த முடியாது

அதற்க்கு வேலைகள் இருக்கலாம்

அல்லது தான் விரும்பிய நேரத்தில்

பிரதிக்கள் வரலாம்

பறவையைப் பிரதிக்குள் வைத்து

வாசிக்க வேண்டுமென்ற

விதிகள் ஏதுமில்லை

வாசிப்பதற்கென்று,

பிரதிக்குள் அடைத்து வைக்கவும் கூடாது

உங்கள் வாசிப்பு பிடித்திருந்தால்

சில வேளை,மனம் விரும்பி

பிரதிக்குள் வரவும் வாய்ப்பிருக்கிறது

வானத்தில், பறந்து கொண்டிருக்கும்

பறவைகளில் ஏதாவதொன்றைப் பார்த்து

அதுதான், பிரதிக்குள்

இருக்க வேண்டியப றவை என

முடிவெடுத்துவிடவும் வேண்டாம்

பிரதியைச் சுற்றி

மிக அருகில் வட்டமிடுகிறதே

அதுகூட பிரதிக்கான

பறவையாக இல்லாமல் போகலாம்

பிரதிக்குள் பறவை பற்றி மட்டுமல்ல

அது வெளியேறிவிடும் படியும்

எழுதினேன்.

உண்மை, யாருக்கும் கேட்காத வண்ணம்

மௌமாக கூவிக்கொண்டு திரிகிறது

பிரதியின் பறவை.

***

Advertisements