கவிதை – சேரன் கவிதைகள்

சேரன் கவிதைகள்

 

 

 

 

 

 

1.
கடவுளர்க்கு நிழல் உண்டா?
இருந்தாலும் யார் கண்டார்?
எம்
நெருப்புக்கும் கண்ணீருக்கும்
இல்லை.
*
2.
பொய்யில் நினைவேந்தல் செய்தால்
மழை பெய்து
கண்ணீரை நிறைக்காது
தீபத்தை இருளாக்கும்

3.
சுக்கிலத்தாலும் குருதியாலும்
வெற்றியை எழுதியவர்க்குப் பதிலாக
நாம் அனுப்பும் கணை

எது?
*

4.
உருவற்ற கவிதையின் உயிரை

தேடாதே
தீ பெருகும்.
*