கவிதை – வேல் கண்ணன் கவிதை

வேல் கண்ணன் கவிதை
மெளன தவம்
நீ
சொல்லிக் கொடுத்தவைகளிலிருந்து
சேகரித்தவைகளை புழங்கத் தொடங்கிவிட்டேன்

பாலை கடந்த பயணமாகட்டும்

ஆழிப்பேரலை சூழ் நிலமாகட்டும்
நித்திரையற்ற இரவாகட்டும்
என்னுடனே நிற்கிறது
விழிக் கருவளையமாய்
கானகத்தில்
பறவைகளின் ஒலியிலும்
விலங்குகளின் சப்தங்களிலும்
வேடுவனின் சீழ்கையிலும்
சலசலத்து ஓடும் நதியின்
பாடலாகவே
தனித்து ஒலித்தபடியே
தொடர் தவம் செய்கிறது
கற்றறியா உன் மெளனம்
*

Advertisements